ஐப்பசி  மாதத்தில் மாலை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம் 
ஆடி போய்விட்டேன் உனது அருள் மழையில் திளைத்துவிட்டேன் 
ஆடி ஆடி பேட்டை துள்ளி நான் உன் வசமானேன்  
ஆடி பாடினேன் நெக்குருக உனது பாடல்களை புனைந்து 
இயன்றவரை புண்ணியம் செய்ய எனக்கு வழி காட்டுகிறாய் 
இருக்கும்வரை இப்பூவுலகில் நற்காரியம் செய்ய அருளிடுவாய் 
இனிக்குதே நினைக்கும்போது என் மனதிலே பாலகா உனது தோற்றமே 
இன்னும் வேண்டும் என யாசிக்கிறேன் உனது வற்றாத அருளை 
இருக்கும்வரை என் குருவின் இனிய ஆசி கிடைத்திட அருள் புரிவாய்
உயிர் உள்ளவரை இவ்வுலகில் உனையே தொழ அருள் செய்வாய் 
உனது பாதமலர் அளித்திட உத்திரவாதம் தந்திடுவாய் 
உமை மைந்தனே ஈசன் புத்திரனே கஜமுகன் இளவலே
பன்வேல் பாலகனே சரணம் சரணம்

No comments:

Post a Comment