PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



காற்றாய்க் கலந்து எம் மூச்சினில் இருக்கிறாய் -அன்பின்
ஊற்றாய் வடிவெடுத்து மெய்உணர்வு தருகிறாய்
சேற்றில் இருந்த எம்மை செந்தாமரை ஆக்குகிறாய்
வேற்றுமைகள் இல்லாத வாழ்வொன்றைத் தருகிறாய்
போற்றுதற்குரிய குருவினை கொடுத்தாய்
அவர் மூலமாக  என்றும் எம் பாவங்கள் போக்குகிறாய்
மாற்றங்கள் தந்தே எமை ஆட்கொள்கிறாய்
சாற்றிய பாக்களில் நீயே வாழ்கிறாய்-உன்
தேற்றுதல் ஒன்றே என் வாழ்க்கையின் துடுப்பு

பன்வேல் வீற்றிருக்கும் பாலகனே நீயே பொறுப்பு


No comments:

Post a Comment