சித்தமெல்லாம் நீயே தித்திக்கின்ற தேனே உத்தரவு தரவேண்டும் சபரிக்கு  வருவதற்கு பக்தி கொண்டேன் நானே பதமலர் தொழுதேனே
அனுக்ரஹ  பூஜையிலே
பரினமளித்து பிரகாசமாய் நின்றாய் சித்திகள் தந்தாய் சிந்தையில் நின்றாய்
குருவின் அலங்காரத்தில் கோபுரத்தில் நின்றாய் எங்களின் இன்னல்களை நொடியிலே களைந்தாய்
புத்தியிலே உறைந்து புது வாழ்வு தான் தந்தாய் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரந்து இருந்தாய்
எம் மூச்சிலே நிறைந்து பேச்சினலே கலந்து புவனத்தில் நிறைந்தாய்
இத்திரு நன்னாளில் குருவின் ஆசியோடு
உன்னிடம் சரணந்தோம் 
அணுக்ரகம் அள்ளி தந்து ஆதரவு தருவாயே

No comments:

Post a Comment