POOJA AT RAMAKRISHNAN SWAMY RESIDENCE - PERUNGALATHUR



அய்யனே என் குருவின் குருவே
சுற்றமும் ஓர் நாள் எனை மறக்கலாம் 
  பற்றிய கரமும் மனம் மாறலாம்
நான் பெற்ற பிள்ளையும் திசை மாறிப்போகலாம் 
  கூடவே பிறந்தவர் எட்டப் போகலாம் 
  உன் அபய திருக்கரம் எனை விலக்குமோ நிச்சய உறவு நீதானன்றோ
இவ்வுலக வாழ்வின் பின்னும் கூடவே வருவது
உனது கிருபையன்றோ
நாட்பட நின்றேன் உன் வரவு நோக்கி
பன்வேல் இருந்து பெருங்களத்தூர்
தேடியே வந்தாய் என் குருஸ்வாமியோடு 
ஏழையின் குடிலுக்கு இன்று

பற்றுக்கள் அறுத்தாய்
முற்றத்து மல்லிகையாய்
மனம் நறுமணம் வீசியது
பெற்ற பேறுணர்ந்தேன்
கொற்றவா உனது
திருவடி பணிந்தேன்
எனைக் காப்பது உந்தன் கழலன்றோ
பாலகா சரணம் சரணம்



















No comments:

Post a Comment