பூக்களின் மெத்தையிலே அற்புதமாய் காட்சி தந்தாய்
வேண்டும் எவருக்குமே அனுகிரஹமாய் காவல் தந்தாய்
தூண்டி உள் மனதில் பக்தி எனும் விதை விதைத்தாய்
தாண்டி மனமேறி அருளாட்சி நடத்துகிறாய்
துதிக்கும் யாவருக்கும் துணை தந்து அருள்புரிந்தாய்
மதிக்கும் மனங்களையே அருகிருத்தி ஆசி தந்தாய்
துடிக்கும் இதயத்திலே அமைதியையே தந்து நின்றாய்
துவளாதே நான் இருக்கேன் என நல் வாக்கு தருகின்றாய்
ஏங்கும் இதயங்களின் ஆவல் நீயும் கண்டெடுத்து
பாங்காய் அதை தீர்த்து பாசமுடன் அரவணைத்து
நீங்காத நிலை தந்து நிர்மலமாய் மனம் தந்து
பன்வேல் இருந்த நீ நல்லூர் அமர்ந்து ஆனந்தமாய் ஆசி தருகின்றாய்

No comments:
Post a Comment