PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா..குருவே சரணம் ...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD GANAPATHY .. MAY THE BLESSINGS OF LORD GANESHA BRING PROSPERITY & HAPPINESS TO YOU ON THIS NEW YEAR & ALWAYS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA " ” முன்னவனே ! யானைமுகத்தவனே ! முத்தி நலம் சொன்னவனே ! தூய மெய்ச் சுகத்தவனே ! மன்னவனே ! சிற்பரசனே ! ஐங்கரனே ! செஞ்சடையஞ் சேகரனே ! தற்பரனே ! நின்தாள் சரண் “ அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் வாழ்வில் நல்லதே நடக்க .. நானிலம் சிறக்க மனிதநேயம் செழிக்க விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத் புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! விநாயகருக்கு பிரியமான மோதகத்தின் (கொழுக்கட்டை) வெளித்தோற்றம் மாவு ஆனால் உள்பாகத்தில் வெல்லமும் தேங்காயும் கலந்த சுவைமிக்க ‘பூரணம்’ என்ற பொருள் இருக்கும் .. இதிலும் ஒருதத்துவம் உள்ளது மேலேயுள்ள மாவுப்பொருள்தான் அண்டம் .. உள்ளேயிருக்கும் சுவையான பொருள் பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும் .. அதாவது நமக்குள் இருக்கும் இனிய நற்குணங்களை மாயை மறைக்கிறது .. இந்த மாயையை உடைத்தால் .. அதாவது வெள்ளை மாவுப்பொருளை உடைத்தால் உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்கு கிடைக்கும் .. பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள் .. விநாயகருக்கு முதன்முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததியே ! அடுத்து “ விநாயகர் அகவல்” 5ம் பகுதியைக் காண்போம் - சண்முகதூலமும் சதுர்முக சூக்குமமும் எண்முகமாக இனிதெனக்கு அருளி .. புரியட்ட காயம் புலப்பட எனக்கு தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கு அருள்செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில் .. பொருள் - உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி .. மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபாலவாயிலை எனக்கு காட்டித்தந்து .. சித்தி முத்திகளை இனிதாக எனக்கு அருளி .. நான் யார் என்பதை எனக்கு அறிவித்து பூர்வஜென்ம கன்ம வினையை அகற்றி சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன்மூலம் எண்ணங்களை தெளிவாக்கி இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி அருள்நிறைந்த ஆனந்தத்தை உன்காதுகளில் அழுத்தமாககூறி .. விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்தும் பெறுவோமாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment