இனிய புது வருடம் 2017 பிறந்தது பாலகா
அருமை பெருமையான தரிசனம் தந்த பாலகா
அருகில் இருந்து எனை காக்கும் பாலகா
அல்லல் படுவோருக்கு ஆறுதல் தரும் பாலகா
அருமை குரு தினம் பூஜை செய்யும் பாலகா  
ஆறுமுகத்துக்கு தம்பியாம்  பாலகா
ஆண்டு கொண்டாய் என் மனதை பாலகா
ஆற்றல் மிகுந்தவனாக எனை ஆக்கிய பாலகா
ஆசானாய் மணி சுவாமியை எனக்கு கொடுத்த பாலகா
 இன்முகத்தை என்னால் காண வைத்த பாலகா
இஷ்டமான தெய்வமாக எனக்கு திகழும் பாலகா
இன்னிசையில் பாட வைத்தாய் பாலகா
இன்றியமையாதது உன்னருள் எனக்கு பாலகா
 ஈரம்மிகுந்த இதயத்தை எனக்களித்த பாலகா
 ஈடில்லா கருணை என்னிடம் காட்டும் பாலகர்
ஈசனின் மைந்தனே என் பாலகா
ஈடில்லா அருளால் எனை ஈர்த்த பாலகா
 உன் பார்வை ஒன்றே போதும் பாலகா
உமையவள் மைந்தனே அழகான பாலகா
உலகில் இனி எதுவும் எனக்கு வேண்டாம் பாலகா
 உனது பாடலை இந்த புது வருடத்தில் சமர்ப்பிக்கிறேன் பாலகா
என்னை சதா ரட்சிக்கும் என் பாலகா
என் குருவின் ஆசி என்றும் வேண்டும் பாலகா 


No comments:

Post a Comment