” துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் !
நெஞ்சில் பதிப்போர்ர்குச் செல்வம்
பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசம் தனை
அமரரிடம் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே ! குறி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று மார்கழி வளர்பிறை சஷ்டித்திதியும் கூடிவருவது சிறப்பு .. வல்வினைகளைப் போக்கி .. வரும்வினைகளைக் களைந்து என்றும் நிம்மதியும் .. சந்தோஷத்தையும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
உயிர்களுக்கு வேண்டுவது மூன்றுசுகம் .. இகம் .. பரம் .. வீடுபேறு .. இந்த மூன்று இடங்களிலும் காத்தருள்பவன் முருகனே ! அதனால் அப்பொருளை உகரங்களுடன் கூடிய “ முருகு “ என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான் ..
இப்பிறவிக்குத்தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத்தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும் வள்ளல் முருகனே!
“ முன்செய்த பழிக்குத்துணை முருகா “ என்பார்கள் .. முருகநாமத்தைச் சொன்னால் முன்வினைப் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பதே பொருளாகும் ..
சஷ்டித் திதியாகிய இன்று முருகனின் சிறப்புகளைப் புகழ்ந்து பாடி அவனருளைப் பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் .. கந்தரலங்காரம் .. கந்தரனுபூதி .. நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மற்றும் கந்தசஷ்டிகவசம் முதலியவற்றுள் சிலவற்றையாவது பாராயணம் செய்து முருகனின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக ..
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா !
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment