GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA --SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM"


” மாதவனே ! மார்கழி
மார்கழியே மாதவன்
ஹரியே சரணம்
ஹரனே சரணம்
ஹரிஹர சிவமே ! சரணம் ! சரணம் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று குருவருளும் இறையருளும் கூடிய இன்நன்னாளில் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்று .. இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக திகழ்ந்திட பகவான் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

மார்கழிமாத மகிமை -
” மாதங்களுள் நான் மார்கழி “ என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் .. இதை தனுர்மாதம் என்றும் கூறுவர் .. இம்மாதம் சிறந்த புண்ணியகாலமாகும் ..

மார்கழிமாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது அதனால் இம்மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும் அவரைத் தோத்திரம் செய்வதும் .. அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகலசௌபாக்கியங்களையும் அளிக்கிறது ..

நாம் நமது மனதை தெளிவுபடுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச்செய்வதற்கு மார்கழிமாதம் மிகச்சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது .. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்யவிரதநாளாகக் கொண்டாடப்படுகிறது .. ஸ்ரீமன் நாராயணனின் 12 நாமங்களும் 12 மாதங்களாக கருதப்படுகின்றன ..

1 - கேசவா
2 - நாராயணா
3 - கோவிந்தா
4 - மாதவா
5 - மதுசூதனா
6 - விஷ்ணு
7 - த்ரிவிக்ரமா
8 - வாமனா
9 - ஸ்ரீதரா
10 - ரிஷிகேசா
11 - பத்மநாபா
12 - தாமோதரா
இதில் முதல் நாமமாக விளங்கும் “ கேசவா “ என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது .. ஆன்மீகமார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதத்தை “ மார்க்கசீர்ஷம் “ என்பர் .. அதுவே நாளடைவில் மருவி “ மார்கழி “ என்றானது ..

இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத்துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் கோலமிட்டு சாணத்தினைப் பிடித்து வைத்து அதன்மீது பூசணிப்பூவை மகுடம் வைத்தாற்போல் அழகுற வைப்பர் .. அதனைச்சுற்றி விதவிதமான வகையில் வண்ண வண்ணபூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர் .. இவ்வாறு வாயில்முன்புறத்தை அலங்கரிக்கும் பழக்கம் பண்டுதொட்டே நிலவிவருகின்றது ..

அதற்குக் காரணமான முக்கிய பாரதக்கதை ஒன்றுண்டு -
பாண்டவர்களுக்கும் .. கௌரவர்களுக்கும் போர்நடந்தது மார்கழிமாதமே ! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர் .. மீண்டவர் பலர் .. பாண்டவர்கள் வீட்டை அடையாலம் கண்டுகொள்வதற்காகவேண்டி வியாசர்வீட்டு வாயிலில் சாணம் இட்டு மொழுகி ஊமத்தம்பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம் .. அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்தகாலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்களின் தாக்குதல் ஏற்படாமல் கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார் .. அன்றுமுதல் இந்தப்பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது ..

ஸ்ரீவைஷ்ணவ ஆலயங்களில் ராப்பத்து .. பகல்பத்து என்றமுறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படுகிறது .. இம்மாதத்தில் எம்பெருமானுக்கு நெய்வழிய வழிய சர்க்கரைப்பொங்கல் நிவேதிப்பதனை
“ கூடாரவல்லி “ என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாக கொண்டாடுகின்றனர் ..

இத்தகைய மங்களகரமான மார்கழியில் வைகறைத்துயிலெழுந்து பகவானைத் துதிசெய்யவேண்டும் .. மார்கழிமாதம் ஒரு சிறப்பான புண்ணியம்தரும் மாதமாகும் .. அதிகளவு பிராணவாயு கலந்த ஓசோன் இம்மாதம் முழுவதும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் தரையில் படியும் .. அப்போது நாம் அதிகாலை நீராடினால் நீரிலும் ஓசோன் கலந்திருப்பதால் உடலுக்கு நல்லது .. திறந்தவெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் நம் உடலில் படியும் .. இதனால் நம்முன்னோர்கள் மார்கழிநீராடல் .. அதிகாலை பஜனை செய்தல் .. பெண்கள் வீதியில் கோலமிடல் என ஏற்படுத்தியுள்ளனர் ..

சிவாலயங்களில் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி
விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும் ..
ஆன்மீகமலர்ச்சிக்கு சிறந்தமாதமாக கருதப்படும் இந்த மார்கழியில் இறைவனை மனதால் துதித்துப் போற்றுங்கள் .. அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக

“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment