PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY HER CHOICEST BLESSINGS BRING YOU ETERNAL BLISS & SHOWER YOU WITH GOOD HEALTH .. SUCCESS & GOOD FORTUNE .. " JAI MATA DI "

” திருமகளே ! திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே ! உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே ! நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது தருமகளே ! தமியேன் தலைமீது நின் தாளை
வையே “
( வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ) 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று தங்கள் அனைவரும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்மும் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியத்துடன்
குன்றாத செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

அன்னை என்பவள் தன்குழந்தைகளை பார்த்து .. பார்த்து 
அலங்கரிப்பதிலேயே இன்பம் காண்பவள் .. ஆகாரத்திலும் சரி .. அணிகளிலும் சரி .. நல்லுரைகள் கூறுவதிலும் சரி ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு அழகிய வடிவையும் கொடுப்பவளாம் .. அம்மா ! தாயே ! அபிராமசுந்தரி ! என்று ஒருமுறை அழைத்தாலே போதும் ஓடிவந்து வாரி அணைப்பவள் அன்னையே ! 
“ வேண்டுவோர் வேண்டுவன ஈவான் கண்டாய் “ என்று அப்பர் திருத்தாண்டகம் சிவனைப் புகழ்வதைப் போன்றே ! 

ராஜராஜேஸ்வரியான பராசக்தி ஒவ்வோர் ஊரிலே ஒவ்வொரு பெயருடன் தன் மெய்யடியார் துயர்தீர்க்க தன்குழந்தைகள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அபய வரதஹஸ்தங்களால் தன் கருத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று நின்று அருள்பாலிக்கின்றாள் .. 
“ உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே நின்றவன் நெடுந்தூரம் போவான் “ என்பது முதுமொழி .. அதனால் தன் அடியார் அழைக்கும் முன்னே ஓடிவந்து அருள்செய்வதற்காகவே விழிப்புடன் நின்று கொண்டே இருக்கிறாளாம் அன்னை மஹாலக்ஷ்மி .. 

ஒவ்வொரு யுகத்திலும் அன்னை மஹாலக்ஷ்மி அஷ்டலக்ஷ்மி உருவம் தாங்குகிறாள் .. எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்டலக்ஷ்மிகளின் பெயர்களும் மாறும் எனப் புராணங்கள் கூறுகின்றன .. 
வைகுண்டத்தில் - மஹாலக்ஷ்மியாகவும் 
சொர்க்கத்தில் - சொர்க்க லக்ஷ்மியாகவும் 
அரசர்களிடம் - ராஜ்ய லக்ஷ்மியாகவும் 
குடும்பங்களில் க்ரஹலக்ஷ்மியாகவும் 
அழகுள்ளவர்களிடம் - சௌந்தர்ய லக்ஷ்மியாகவும் 
புண்ணியாத்மாக்களிடம் - ப்ரீதி லக்ஷ்மியாகவும் 
க்ஷத்ரிய குலங்களில் - கீர்த்தி லக்ஷ்மியாகவும் 
வியாபாரிகளிடம் - வர்த்தக லக்ஷ்மியாகவும் 
வேதங்கள் ஓதுவோரிடமும் - தயாலக்ஷ்மியாகவும் .. பொலிபவள் அன்னையே ! 
அழகின் உறைவிடம் ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment