SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE VAIKUNTA EKADASHI .. IT'S AN AUSPICIOUS DAY DEDICATED TO BHAGAVAN SRI HARI VISHNU .. MAY THE BLESSINGS OF THE LORD VISHNU SHINE UPON YOU ON THIS DAY & MAY HIS LIGHT GUIDE YOUR PATH & MAY HIS LOVE GRACE YOUR HEART .. & MAY HIS BLESSINGS STRENGTHEN YOUR SOUL TOO ..
" OM NAMO NAARAAYANAAYA " ..

” அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா ! நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே ! நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல பரந்தாமனை அருள்மழைபொழியும் “ வைகுண்ட ஏகாதசி “ நன்னாளாகிய இன்று தங்கள் இல்லறம் சிறக்கவும் .. துன்பமற்ற நல்வாழ்வு அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

மார்கழிமாதம் வந்த உடனே திருமாலின் உன்னத கருணையைப் போல் நம்மனதைக்குளிரவைக்க வரும் விரதம் “ வைகுண்ட ஏகாதசி விரதமாகும் “ தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன்வழியாக வெளியே வந்து காட்சிதரும் நாளாகும் .. இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்குவாசல் வழியாக வருகின்றார் ..
(தெற்கே பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளார்) இந்நேரத்தையே நாம் சொர்க்கவாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம் ..

“ வைகுண்ட ஏகாதசி அமைந்த விதத்தைக் காண்போம் “

ஒருசமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார் .. அந்த நான்முகனை அழிக்க மது .. கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர் .. அவர்களைத்தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார் .. பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “ நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்யவேண்டும் என்று வேண்ட அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ் ஏகாதசியன்று விண்ணகத்தின் வடக்குநுழைவாயிலைத்திறந்தார் .. அதன்வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார்
அப்போது அந்த அசுரர்கள் “ மார்கழி சுக்லபக்ஷ் ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்கவாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்கவேண்டும் .. அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷ்ம் பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்
அதன்படியே நடக்கும் எனத் திருமாலும் .. அசுரர்களுக்கு ஆசி வழங்கினார் ..

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது .. கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வாசலை காவலர்களான ஜய .. விஜயர்கள் மூடியபோது பகவான் கலியுகத்திலும் பக்திபெருகும் .. தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள் அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபதவாசல் திறந்தே இருக்கும் என்று அருளினார் ..

பிரகலாதன் தன் தாய் கயாதுவின் வயிற்றில் சிசுவாக இருந்தபோது நாரதர்மூலம் விஷ்ணுவின் மகிமையைக் கேட்டே பக்தனாக அவதரித்தான் அதுபோல் ஏகாதசியன்று ஹரிகதைகேட்பதும் .. பஜனைபாடுவதும் அதிகபட்ச புண்ணியபலனைத் தரும் ..

ஏகாதசிவிரதமே சிறப்பாகப் பேசப்படும்போது சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதத்தையாவது கடைபிடித்து நாராயணனின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: indoor

No comments:

Post a Comment