SWAMIYE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM TOO .. MAY LORD SHIVA SHOWER HIS BENIGN BLESSINGS UPON YOU & MAY HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAAYA

சிவனை நினைப்பவர்க்கு அனுவளவும் குறைவு இல்லை
புவனம் முழுதுமவன் பொற்பாதங்கள் பதித்த எல்லை ..
எமனை வீழ்த்திட்ட எம்பெருமான் சிவனை .. தலையைத் தாழ்த்தி கும்பிடுவாய் தினம் மனமே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சோமவார திங்கட்கிழமையாகிய இன்று தங்களனைவரது
வாழ்விலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் .. நிம்மதியும் என்றும் நிலைத்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சோமவார விரதம் சிவபெருமானுக்கு உகந்த விரதமாகும்
இவ்விரதத்தை சந்திரபகவான் கடைபிடித்ததால் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான் .. இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது

“ சோமன் “ - என்றால் பார்வதியுடன் கூடிய சிவன் என்றும் “ சந்திரன் “ என்றும் பொருள்படும் .. திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பது சிறப்பு ..

சந்திரனின் கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான் .. சந்திரனின் பெயரால் சோமவாரம் தோன்றியது .. தன்பெயராலும் .. தனது வாரத்தினாலும் (கிழமை) பிரசித்திப் பெறவேண்டும் என சிவனை வேண்டிட சிவனும் அதனை ஏற்று சிறப்படையச் செய்தார் ..

சிவனைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலம்பல
பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment