PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " THIRUVADIRAI " WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE FULFILL ALL YOUR DESIRES & REMOVE ALL THE SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE TOO .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..


ஒருபாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும்
காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும் ..
வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும்
மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும் ..
கருணையே வடிவானவரும் .. கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஓம் என்ற பிரணவத்தின் வடிவமான நடராஜப் பெருமானுக்கு உகந்த சிறப்புமிக்க மார்கழித் திருவாதிரை நன்னாளாகிய இன்று அவரைப் போற்றித்துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் பெற்று
ஆனந்தமாக வாழ .. ஆனந்த நடனமாடும் ஆடல் அரசனாகிய நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்

ஓம் சித்ஸபேசாய வித்மஹே !
சிதாகாசாய தீமஹி !
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!

மாயா மலத்தை ஓட்டி .. கன்ம மலத்தை சுட்டு .. ஆணவமலத்தை அதன்வலி கெடுமாறு அழுத்தி .. ஆன்மாக்களை அருளாலே மேலேதூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச்செய்வதே ! இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும் ..

மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரம் சிவ வழிபாட்டிற்குரிய நாட்களில் மிகச்சிறந்ததாகக் கூறப்படுகிறது .. பத்துநாட்கள் நோன்பான திருவெம்பாவை மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும் ..

இந்நாளில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும் .. இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது .. ஆருத்ரா தரிசனம்
சிவபெருமானுக்குரிய அஷ்டமகா விரதங்களுள் ஒன்று ..
மார்கழிமாத மதிநிறைந்த நாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாபவிமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுதக்கலைகளால் ஆசீர்வதிக்கின்றான் ..

ஒருசிறப்பு மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்மடங்காகும் .. என்பதில் சந்தேகமில்லை .. அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும் .. வளங்களையும் .. நலன்களையும் வாரி வழங்கும் வழிபாடாக திகழ்கிறது ..

நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அவரது ஐந்தொழில்களான
ஆக்கல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் .. அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது .. அதன்பொருட்டே கோவில்களில் “பஞ்சகிருத்திய” உற்சவம் நடந்துவருகிறது ..

நடராஜருக்கு நிவேதனமாக களிசெய்து படைப்பார்கள் ..
களி - என்பது ஆனந்தம் என்றும் பொருள்படும் ..
அஞ்ஞானம் அகன்று .. மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும் .. ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே “ திருவாதிரைக் களி “ நிவேதனமாகும் ..

புராண வரலாறு -
ஒருசமயம் மஹாவிஷ்ணு திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார் .. அன்னை மஹாலக்ஷ்மியும் உடன் இருந்தபோது கண்களைமூடியபடி இருந்த திருமால் திடீரென “ ஆஹா !
அருமை ! அற்புத நடனம் “ என்று மனமுறுகி கூறியபோது ஆதிசேஷனும் .. லக்ஷ்மிதேவியும் ஒன்றும் புரியாமல் வினவ .. திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை தன் ஞானக்கண்களால் கண்டு தரிசித்ததைக் கூறினார் ..

ஆதிசேஷனுக்கும் அதனைக்காணவேண்டும் என பரவசம் அடையவே விஷ்ணுபகவானும் பூவுலகம் சென்று தவமிருந்து தரிசித்துவிட்டு வரும்படி விடைகொடுத்தார்
ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் .. இடுப்புவரை மனித உடலும் .. இடுப்புக்குக்கீழே பாம்புத்தோற்றமும் கொண்டதாக அவரது உடலமைப்பு அமையப்பெற்றிருந்தது ..

பதஞ்சலி முனிவர் பலகாலம் தவமிருந்ததன் காரணமாக திருவாதிரைத் தினத்தன்று சிதம்பரத்தில் தன் திருநடனகாட்சியை சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார் ..அன்றைய தினமே !
“ ஆருத்ரா தரிசனமாகும் “

திருவாதிரைத் திருநாளில் சிவனைப் பூஜித்தால் நல்ல கணவர் அமைவதாகவும் .. தாலிப்பலன் பெருகும் .. பாவங்கள் நீங்கும் .. அறிவும் ஆற்றலும் கூடும் என்பது ஐதீகம் .. சிவனைப் போற்றுவோம் ! பலனாயிரம் பெறுவோமாக !
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment