அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இனிய போகிப்பண்டிகை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான
நன்னாளாக அமைந்திடவும் .. இவ்வருடத்தில் போதியளவு மழை பொழிந்து விவசாயத்தை பாங்குறச் செய்யவும் இந்திரபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தேவராஜாய வித்மஹே !
வஜ்ரஹஸ்தாய தீமஹி !
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
இந்திரனுக்கு “ போகி “ என்றொரு பெயரும் உண்டு .. மழைபொழியவைக்கும் கடவுள் வருணன் .. அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன் .. மழைபெய்தால்தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் .. எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது ..
போகிப்பண்டிகை மார்கழிமாதத்தின் இறுதிநாளாகிய இன்று கொண்டாடப்படுகின்றது .. இந்நாள் “ பழையன கழிந்து புதியன புகவரும் “ நாளாகக் கருதப்படுகிறது ..
பழையவற்றையும் .. பயனற்றவைகளையும் விட்டொழிக்கும் நாளாகத்திகழ்கிறது .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் பண்டிகையை “ போக்கி “ என்றனர் .. நாளடைவில் மருகி “ போகி “ என்றாகிவிட்டது ..
அக்காலங்களில் பிளாஸ்டிக் .. டயர் போன்ற எரிக்கும் போது மாசுபடுத்துகின்ற பொருள்கள் இருந்ததில்லை .. மேலும் அவை போன்ற பொருள்களினை எரித்ததும் இல்லை .. ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் பிளாஸ்டிக் .. ரப்பர் பொருள்கள் போன்றவற்றினை எரிக்கும்போது அவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது ..
மார்கழிமாதம் ஏற்கனவே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் இப்புகைமூட்டமானது வளிமண்டலத்தில் நிரம்பி பார்க்கும் திறனைகுறைத்து .. சாலைப்போக்குவரத்து .. ரயில்போக்குவரத்து .. விமானப்போக்குவரத்து போன்றவையும் பாதிக்கும் சூழ்நிலையினையை ஏற்படுத்துகின்றது .. எனவே போகிப்பண்டிகையன்று டயர் .. ரப்பர் .. பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப்பொருள்களை எரிக்காமல் பழையமுறையிலேயே சுற்றுச்சூழலுக்கு மாசுஏற்படாவகையில் போகியைக் கொண்டாடி மகிழ்வோம் ..
பொருட்கள் மட்டுமல்லாது உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் .. வேண்டத்தகாத எண்ணங்களையும் ..
“ ருத்ரகீதை ஞானயக்ஞம் “ என அழைக்கப்படும் அக்னிகுண்டத்தில் எரித்து பொசுக்கி .. தெய்வீக குணங்களை வளர்ப்பதும் .. ஆன்மாவை தூய்மையாக்குவதும் போன்ற நற்குணங்களையும் கொள்வோமாக ..
இந்திரனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தினைப் பெறுவோமாக !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:
Post a Comment