SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய கலியுகவரதனாம் கந்தப்பெருமானைத் துதித்து மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் .. வல்வினை நீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

வேதங்களே மயிலாகி ஞானவடிவேலனைத் தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது .. முருகனுக்குரிய “ வேலும் மயிலும் “ என்ற தமிழ் மந்திரத்தில் மயில் இடம்பெற்றுள்ளது ..
“ வேலுண்டு வினையில்லை ! மயிலுண்டு பயமில்லை “ என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு ..

முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கை போன்று ஆறாக அருள்மழை பெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து ..
“ குகமயமாக ! ஸர்வம் குஹமயம் ஜகத் “ என வழிபடல்வேண்டும் ..

முருகனை போற்றித்துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன .. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்கள் நாவில் விளையாடுவது “ கந்தசஷ்டி கவசமும் “ மற்றும் “சுப்ரமண்ய கவசமுமாகும்” .. இந்த கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி பாராயணம் செய்கின்றோமோ அந்த அளவுக்கு முருகன் திருவருளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிட்டும் ..
நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்பதனை உணர்ந்து அவன் பொற்பாதங்களில் சரணடைவோமாக ..

“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Comment

No comments:

Post a Comment