SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM

” தெய்வானை மணாளனே ! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே !
சரணடைந்தவரைக் காப்பவனே ! தேவர்களைக் காத்த தேவசேனாதிபதியே ! வாழ்நாள் முழுவதும் எமக்கு வழித்துணையாக வருவாயாக “





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையும் சஷ்டித் திதியுமாகிய இன்று முருகப்பெருமானை பக்தியுடன் மனமுருகப் பிரார்த்தித்து .. சகல தோஷங்களிலிருந்தும் .. தடை .. தடங்கல்களிலிருந்தும் விடுதலை பெற்று வளமான வாழ்வுதனை பெறுவோமாக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

“அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி”
அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப்பெருமான் ..

பகைவனை வெல்வது கந்தசஷ்டி விரதமல்ல ..
“ பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே “ இந்த விரதத்தின் சிறப்பு .. அழகன் முருகனை வழிபடுவதன்மூலம் அடியவர்களின் சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் தினமும் நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன்மூலம் பதினாறு பேறுகளும் ( செல்வங்கள் ) கிடைக்கப்பெறுவர் என்பதனை “ துதிப்போர்க்கு வல்வினைபோம் “ என்னும் அடிகள்மூலம் அறியமுடிகிறது ..

ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளை மூன்று கண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! தன் அடியார் வேண்டும் நலங்களை எல்லாம் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம் வாய்ந்த முருகனை நெஞ்சாரத்துதித்து என்றும் குறையாத செல்வத்தைப் பெறுவீர்களாக ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" SHASHTI " & A DIVINE WEDNESDAY TOO ..MAY LORD MURUGA
REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD LUCK .. PROSPERITY & HAPPINESS
" OM MURUGA "

Image may contain: 5 people, indoor

No comments:

Post a Comment