GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE ASHTAMI THITHI .. MAY LORD BHAIRAVA RELIEVE YOU FROM ALL MISFORTUNES .. SUFFERINGS & PAINS & CHERISH YOU WITH ALL ROUND SUCCESS & A HEALTHY HAPPY LIFE TOO .. " JAI SHREE BHAIRAVA DEV " SWAMI SARANAM....GURUVE SARANAM

Image may contain: 2 peopleகாலத்தை வென்றவனே ! காசிக்கு சென்றவனே ! கயிலைவாழும் மூலத்தை காட்டியவா ! சூலத்தை நீட்டியவா ! கோபம்கொண்டு வேழத்தை உரித்தவனே ! பைரவா ! பணிகின்றோம் வினைகள் தீர்ப்பாய் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியும் மாலையில் வருவதால் இன்றே காலபைரவருக்கு ஆலயம்சென்று விளக்கு ஏற்றுவது சிறப்பாகும் .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று பயம் நீங்கி நல்லாரோக்கியம் .. வியாபாரத்தில் தனலாபமும் பெற்றிடவும் ஸ்ரீபைரவரைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே !
ஸ்வர்ண வாஹனாய தீமஹி !
தந்நோ பைரவ ப்ரசோதயாத் !!

கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே காலபைரவர் வழிபாடாகும் .. பூவுலகம் என்பது காலம் .. இடம் என்று இருதத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரியமுறையில் வழிபடும் முறையை நம்முன்னோர்கள் வகுத்துள்ளனர் .. அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே காலபைரவர் வழிபாடு
எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவமூர்த்தி ..

எல்லா சிவாலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் .. நாய்வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் .. இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவிலும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்படவேண்டும் என்று நித்யாபூஜாவிதி கூறுகிறது ..

ஸ்ரீபைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும் நல்லருள்கிட்டும்
இலுப்பை எண்ணை .. விளக்கெண்ணை .. தேங்காய் எண்ணை .. நல்லெண்ணை .. பசுநெய் .. இவற்றினை தனித்தனி தீபமாக அகல்விளக்கில் ஏற்றலாம் ..

தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகுகாலத்தில் ஸ்ரீபைரவரின் சன்னதிக்கு சூட்சுமமாக அஷ்டலக்ஷ்மிகளும் வருகை தருகிறார்கள் .. அவர்கள் பைரவரை வழிபடுகிறார்கள் .. அந்நேரத்தில் நாமும் சென்று வழிபாடு செய்து நம் வேண்டுதல்களை வைத்தால் அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள் ஏதேனும் ஓர் தீர்வு வந்துவிடும் ..

நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை வழிபட
(நிறைவான வாழ்க்கை வாழ) அனுமதிக்காது .. நிறைய தடைகளை ஏற்படுத்தும் .. சோம்பேறித்தனத்தை உண்டுபண்ணும் .. அல்லது நாமே ஏதேனும் காரணம் சொல்லி சிறிது நாட்களில் வழிபடுவதையே விட்டுவிடுவோம் .. இதுபோன்ற தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வழிபாட்டை செய்து பைரவரின் அனுக்கிரகத்தைப் பெறுவோமாக !
” ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment