” தேவீ உன் திருவிழிகள் என் திசையை நோக்கட்டும்
தீராத தீவினைகள் தகர்த்துப் போகட்டும்
உலகின் எல்லைகளை நிர்ணயிக்கும் திசையெட்டும் உன் பிள்ளைகள் நாம் என்ற நற்செய்தி பரவட்டும் ..
உன்பாதம் பணிந்தவன் மேல் உன் பார்வை பதியட்டும்
இந்த மஹாவிஷ்ணு பக்தனுக்கு மங்களங்கள் அருளட்டும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும்
அள்ளித்தரும் அன்னை மஹாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமையாகிய இன்று துதித்து
தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வாழ்வில் நிம்மதியும் .. சகல
சௌபாக்கியங்களும்
நிறைந்த வாழ்வும் மலரட்டும் என அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்மி ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு .. நம் மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி .. பயம்நீக்கி .. அறிவொளி மிளிர எமை காத்தருள்பவளும் அன்னையே!
மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும் .. மூவுலகத்துக்கு தாயுமான மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும் மிகுந்த பாக்கியசாலிகளாகவும் .. வித்வான்கள் கொண்டாடும் புத்தி .. சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர் ..
“ தான் தோற்றுவித்த உலகங்கள் சற்றும் பிறழாத தாளகதியில் சீராக இயங்கிட தன் மாயாசக்தியை அவற்றினூடே செலுத்தி அந்த அண்டங்களுக்கோர் சக்தியாய் .. தலைவியாய் விளங்குபவளின் தாள் போற்றி
அஞ்ஞானத்தினால் மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று வினைப்பயனால் அல்லல்படுவோருக்கும் பிறவிப்பிணியை அகற்றிடும் பெரும் ஞானஒளியாக விளங்கும் அன்னையின் பத்மபாதங்களைப் போற்றுகின்றோம் .. துன்பங்களிலிருந்து விடுபடவும் .. உய்வு பெறவும் எமை ரட்சிப்பாளாக “
“ ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:
Post a Comment