PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A BLESSED SATURDAY TOO .. MAY SHREE HANUMAN REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & MAY YOU BE BLESSED WITH POWER .. STRENGTH .. FAME & SUCCESS .. JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN !

” அனுமனைப் பாடு மனமே !
உன்னை அணுவும் அணுகாது பயமே !
நாள்தோறும் ஸ்ரீராம ஜெயமே ! சொல்லும் வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமே ! என்றும் அவனை நினைத்தால் போதும் எதிர்ப்புகள் எல்லாம் மறைந்தே போகும்
கவலை என்பது மலை என்றாலும் கவலை வேண்டாம்
அவன் கை தாங்கும் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அன்பு .. அறம் .. அருள் ஆகியவற்றின் முழுவடிவமாகத் திகழும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உகந்த சனிக்கிழமையாகிய இன்று அவரைத் துதித்து தங்கள் குறிக்கோளை எட்டும் திறன் .. புகழ் .. வாக்குவன்மை அனைத்தும் பெற்று வாழ்வில் வெற்றிகளைக் காண வாயுபுத்ரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமந் ப்ரசோதயாத் !!

ஆஞ்சநேயரை வணங்கும் அடியார்கள் “ ஸ்ரீராமஜெயம் “ கூறுவதன்மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம் .. ஒருமுறை “ ராம “ என்று சொன்னால் அது ஒரு சகஸ்ரநாமம் (1008 தடவைகள்) சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் உத்தரபாகத்தில் கூறியிருக்கின்றார் .. தன்னுடைய உடல் பொருள் .. ஆவி அனைத்தையுமே ஸ்ரீராமனுக்கே அர்ப்பணித்து தனக்காக வாழாதவர் ..
“ ஸ்ரீராமநாமத்திற்கு “ ஏன் இவ்வளவு பெருமை என்றால் சிவவிஷ்ணுவின் ஐக்கியமே ! ஸ்ரீராமநாமம் .. நாராயணாவிலிருந்து வருகின்ற “ ரா “ வும் ..
நமசிவாயவிலிருந்து வருகின்ற “ ம “ வும் சேர்ந்த நாமமே
“ ராம “

ஆஞ்சநேயப் பெருமான் துணிவிலும் .. பணிவிலும் சிறந்தவர் .. ஸ்ரீராமபக்தியிலே உயர்ந்தவர் .. அன்பின்கடல் அறிவின் சுரங்கம் .. தன்நலம் கருதாத தனிப்பெரும்கருணை .. பொறுமையின் சிகரம் .. வீரத்தின் விளைநிலம் .. ஒருமுறை “ ஸ்ரீராமஜெயம் “ சொன்னாலே சகலசெல்வங்களையும் அள்ளித்தருகின்ற வள்ளல் .. தன்னுடைய மார்பினைப் பிளந்து ஸ்ரீராமனையும் .. அன்னை சீதாப்பிராட்டியையும் காண்பித்த தெய்வம் ..
அனுமனின் தலைவனான ஸ்ரீராமனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் - “ நன்றிமறவாமை “ எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் .. கஷ்டப்பட்ட காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது
பகவான் மஹாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதாரம் செய்தபோது சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார் .. அவருக்கு நன்றிக் கடன்பட்டவராக இருந்த மஹாவிஷ்ணு அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக
“ இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும் ! உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத்தான் இருப்பேன் “ என்றார் .. அனுமனை வணங்கினால் மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை ..

அனுமன் இன்றி ராமன் இல்லை ! ஸ்ரீராமன் இன்றி அனுமன் இல்லை “ வாழ்க ஸ்ரீராமநாமம் ! வளர்க ஸ்ரீராமபக்தி !
அஞ்சேல் ! என்று ஆசிகூறி அபயம் அளிக்கும் ஸ்ரீஅனுமன் பாதம் பணிவோம் ! எல்லா தோஷங்களும் .. தடைகள் .. தடங்கல் நீங்கப் பெறுவோம் !
ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ !


No comments:

Post a Comment