SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " SHATTILA EKADASI " 
ON THIS EKADASI DAY OFFERING SESAME SEEDS WITH WATER & FOOD TO THE POOR WILL WASH AWAY ALL THE EVIL DEEDS & SINS & BE BLESSED WITH HAPPINESS TOO .. 
" OM NAMO NAARAAYANAAYA " 

” குலந்தரும் செல்வம் தந்திடும் 
அடியார் படுதுயர் ஆயின எல்லாம் 
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் 
அருளொடு பெருநிலம் அளிக்கும் 
வலந்தரும் மற்றும் தந்திடும் 
பெற்றதாயினும் ஆயின செய்யும் 
நலந்தரும் சொல்லை நான்கண்டுகொண்டேன் 
’ நாராயணா ’ எனும் நாமமே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் கூடிவருவதால் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவது சிறப்பாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் செய்யும் அனைத்து செயல்பாடுகளும் வெற்றியளிக்கவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை
“ ஷட்திலா ஏகாதசி “ என்றழைப்பர் .. திருமாலை வழிபடுவது தான் இந்நாளின் சிறப்பு 
இதில் ஷட் - என்பது 6 என்றும் 
திலம் - என்பது எள் என்றும் பொருள்படும் .. 
இந்நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை 6 விதமாக பயன்படுத்துவார்கள் .. 
1 - எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது 
2 - எள்தானம் செய்வது 
3 - எள்ளால் ஹோமம் செய்வது 
4 - எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது 
5 - எள் நிரம்பிய நீர் ஸ்நானம் 
6 - எள் அன்னம் உண்பது 

இதனால் பிரம்மஹத்தி .. பசுவதை .. திருட்டு போன்ற கொடியபாவங்களும் கூட களைந்துவிடும் .. மேலும் இவ்விரதம் அனுஷ்டிப்பவரின் இல்லத்தில் என்றும் உணவுப் பஞ்சமே வராது என்று “ பவிஷ்யாத்ர புராணம்”
குறிப்பிடுகிறது .. 

புராணவரலாறு - 
பலதர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள் .. அங்கு எல்லா வசதிகளும் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை .. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை .. பின்னர் ஒரு துறவியின் ஆலோசனைப்படி தேவலோகப் பெண்ணொருத்தியின் ஷட்திலா ஏகாதசி விரதப்பலனை இவள் பெற்றாள் .. அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது .. எனவே இந்த விரதத்தைக் கடைபிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது .. 

இந்த விரதத்தினால் நமக்கு சரீரசுத்தி .. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அன்னம் .. எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம் .. தான்யவிருத்தியும் கிட்டுகிறது .. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ அவையாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது 

இதன் அர்த்தம் என்னவென்றால் தார்மீக காரியங்களை அவற்றின் விதிப்படி செய்யும்பொழுது கூடவே தானங்களையும் அவசியம் செய்யவேண்டும் .. தான தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக காரியங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

பகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment