SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM SINS & ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH WEALTH & HAPPINESS .. " OM MURUGA " 

” பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா ! 
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா 
நம்பியவர் வந்தால் ! நெஞ்சுருகி நின்றால் ! கந்தா ! 
முருகா ! வருவாய் ! அருள்வாயே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று எங்கள் எண்ணம் .. சொல் .. செயலுக்கு எட்டாதவன் .. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவரும் பரம்பொருளாகிய முருகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் வேண்டிய வரங்களை தன் பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும்படி பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

ஆறு என்ற எண் முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது .. 
அவனது திருமுகங்கள் - 6
கார்த்திகைமாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன் 
அவனது மந்திரம் ஆறெழுத்து 
“ நமகுமாரய “ அல்லது “ சரவணபவ “ 
அவனது இருப்பிடம் அறுபடைவீடுகள் 
அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம் ..
மஹாகந்தசஷ்டியில் ஆறாம்நாள் சூரசம்ஹாரம் ..

முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது ..
தெய்வத்தன்மை .. மணம் .. இனிமை .. இளமை .. மகிழ்ச்சி
அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன் .. 

கிழக்கு .. தெற்கு .. வடக்கு .. மேற்கு .. மேல் .. கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர் .. 

ஈசானம் .. தத்புருஷம் .. வாமதேவம் .. அகோரம் .. சத்யோஜாதம் என்ற ஐந்துடன் “ அதோமுகமும் “ சேர்ந்ததுவே ஆறுமுகம் .. 
சரவணபவ - என்பது ஷடாக்ஷ்ர மஹாமந்திரம்
(6 எழுத்துகள்) 
இதன் மகிமை - 

ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்
ர - சரஸ்வதி கடாக்ஷ்ம்
வ - போகம் - மோக்ஷ்ம்
ண - சத்ரு ஜெயம் 
ப - ம்ருத்யுஜயம் 
வ - நோயற்ற வாழ்வு .. 
ஓம் நம சரவணபவாய என்பது குஹதசாக்ஷ்ரம்
ஓம் நம சரவணபவ நம ஓம் என்பது குஹத்வா தசாக்ஷ்ரம்

ஜோதிடசாஸ்திரத்தின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் .. ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் .. தடைகளும் நீங்கி வளமான வாழ்வு அமைந்திட ஆறுமுகப்பெருமானை சரணடைவோமாக ! 

” ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

 Image may contain: 3 people

No comments:

Post a Comment