எது செய்யினும் என் பாலகர்
அதுவோ இதுவோ என்ற குழப்பம் எனக்கில்லை
இவர் தான் என் ஆன்ம பலம்
இவர் தான் என் ஆன்ம குரு
என் ஆன்மாவுக்கு மிக பழக்கமானவர்
ஜென்மாந்திர உறவு எனக்கு
என் பிழை சரி செய்தவர் இவர்
என் பலமுடன் பலவீனமும் தெரிந்தவர்
துன்பம் வரும்போது தன் காலடியில்
இருத்தி எனைத் தேற்றியவர்
நெடுநாள் பந்தத்தைக் கண்டஓர் துடிப்பு
ஏன் எனை விட்டுப் பிரிந்திருந்தீர்கள்
என்னை முன்னரே வந்து
ஆட்கொள்ளக்கூடாதா என்றதற்கு
நான் உன்னுடனே இருந்தேன் என்றார்
வருடா வருடம் குருசுவாமியுடன் வரும்போது
நீ என்னை அடையாளம் காணவில்லை என்றார்
உயிர்கள் யாவும் பாலகர்
விலங்கும் தாவரமும் பாலகர்
நானும் நீயும் பாலகர்
அன்பில் ஏழை பணக்காரனெனும்
பேதம் உண்டோ
அன்னம் உவந்தளி அன்பை அள்ளிக்கொடு
பாலகர் உன் அருகில் இருப்பார்

No comments:

Post a Comment