SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY REPUBLIC DAY FOR ALL MY INDIAN FRIENDS & A DIVINE (MONTHLY) SIVARATRI TOO .. MAY THE ALMIGHTY LORD SHIVA SHOWER YOU WITH HAPPINESS & PROSPERITY & MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ..
" OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH -

” ஈசனை துதிசெய்வாய் நல்மனமே !
ஈகையாய் வரம்பெறுவாய் அனுதினமே !
ஒரு துன்பமும் இல்லாது மறையுமே !
‘ ஓம் நமசிவாய ‘ ஓதினாலே ! குறையுமே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இந்திய குடியரசு தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. குருவருளும் இறையருளும் கூடிய இன்நன்னாளில்
“ மாதசிவராத்திரியும் “ அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரும் ஈசனின் அருட்கடாக்ஷ்த்தோடு சீரானவாழ்வும் .. செல்வ வளமும் பெற்று .. சுபீட்சமான வாழ்வும் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சிவராத்திரி ஐந்து வகைப்படும் -
1 - நித்திய சிவராத்திரி
2 - பட்ச சிவராத்திரி
3 - மாத சிவராத்திரி
4 - யோக சிவராத்திரி
5 - மகா சிவராத்திரி - மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம் ..

“ ராத்ர “ என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள் .. இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர் .. ஒவ்வொருநாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன அதனையே “நித்திய சிவராத்திரி”
என்று குறிப்பிடுவர் ..

தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது “பட்ச சிவராத்திரி ..
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது “ மாத சிவராத்திரி “
சோமவாரமான திங்கட்கிழமையில் சிவராத்திரி வந்தால்
“ யோக சிவராத்திரி “
மாசிமாத சிவராத்திரியே “ மகா சிவராத்திரியாகும் “

அம்பிகையின் கோரிக்கை -
மகாசிவராத்திரியைப் பற்றிய புராணக்கதைகள் பல உள்ளன .. அதில் முக்கியமாகக் கூறப்படும் கதை ஒன்று உள்ளது -
அதாவது பிரளயகாலம் பிரம்மனும் .. அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டனர் .. உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின .. உலகங்களே இல்லாமல் இருந்தது .. இந்த நிலையில் எல்லையில்லாக்கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள் .. அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களையும் படைத்தருளினார் ..

அப்பொழுது உமையவள் சுவாமி ! நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றியகாலம் “ சிவராத்திரி “ என்று பெயர் பெறவேண்டும் என்றும் .. அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைபிடிக்கவேண்டும் என்றும் .. அதை கடைபிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிரார்த்தித்தாள் .. இறைவனும் அவ்வாறே என்று அருள்புரிந்தார் ..
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம்பெருமான் .. சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்கள் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது ..
இப்புனித நாளில் நாமும் ஈசனைத் துதிசெய்து நல்லாசி பெறுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

Image may contain: 3 people

No comments:

Post a Comment