SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE " THIRUVONAM STAR " MAY LORD VISHNU BLESS YOU & SHOWER YOU WITH HAPPINESS & GOOD FORTUNE & PROSPERITY .. " OM NAMO NAARAAYAnAAYA "
” என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவனாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் 
மின்னப்பொன் மதிழ்சூழ திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன் 
தன்னொப்பாரிலப்பன் ! தந்தனன் தனதாள் நிழலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் கூடிவருவதால் இதனை 
“ ஸ்ரவண விரதம் “ என்றழைப்பார்கள் .. இன்றைய நாளில் தங்களனைவருக்கும் குறைவில்லாத செல்வமும்
துன்பங்கள் நீங்கி உறவினர் கொண்டபகை .. அகன்று பகைவரே நண்பர்களாகத் திகழ்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
 Image may contain: 1 person
மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது ஸ்ரவண விரதமாகும் .. தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் .. இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் நிகழாது .. வாழ்வில் என்றும் அமைதி ஏற்படும் .. உறவினர்கொண்ட பகை அகலும் .. பகைவரும் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் ..
108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் இந்நாளில் ஸ்ரவணம் என்ற விழா பிரசித்தம் .. 
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ 
என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் ! என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் ..
ஸ்ரீமன் நாராயணனைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



No comments:

Post a Comment