ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !
அருள்பொங்கும் முகத்தைக்காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி ! தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பாய் போற்றி ! தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம்
கொடுப்பாய் போற்றி !
தூயவர் இதயம்போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பைவைத்து சாரத்தைத் தருவாய் போற்றி
ஞாயிறே ! நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியபகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
சூரியபகவான் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர்மிகும் அறிவுடன் கூடிய சுட்டும்விழிச்சுடரான தெளிந்த கண்பார்வையும் கிட்டும் ..
உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியன் .. எல்லா கோள்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயங்க வைப்பவனும் சூரியனே ! அதனால் பஞ்சாங்கம் .. ஜோதிடகணிப்புகள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது .. சூரியபகவானை தினமும் வணங்கினால் சகல சௌபாக்கியத்தையும் தந்தருளுவான்
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்கும் ஆற்றல் சூரியவழிபாட்டிற்கு உண்டு ..
ஆயிரம் கரங்களுடன் நம்மை உதயநேரத்தில் - பிரம்மரூபத்திலும் ..
உச்சிப்பொழுதில் - பரமேஸ்வர ரூபத்திலும் ..
அஸ்தமன மாலை நேரத்தில் - விஷ்ணு ரூபமாகவும் காப்பதாகவும் ஐதீகம் ..
சூரியபகவானைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் சூர்யாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment