GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE ' SADURTHI ' MAY LORD GANAPATHY PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & ENRICH YOUR LIFE WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " JAI SHREE GANESHAAYA NAMAHA " GURUVE SARANAM SWAMIYE SARANAM

” வெள்ளம்போல் துன்பம் வியலுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க - உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வளரொளி விநாயகனே ! வா “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் செவ்வாய்க்கிழமையும் .. சதுர்த்தித் திதியும் கூடிவருவது சிறப்பு .. விகனவிநாயகரைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. இக..பர சுகங்கள் யாவும் பெற்று தங்கள் வாழ்வில் வசந்தம் வீசிட கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

கோவில்களில் விநாயகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது “ ஓம் அநீஸ்வராய நமஹ “ என்றும் கூறுவார்கள் .. அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் ( இறைவன் ) இல்லை என்பது பொருளாகும் ..
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன ..
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளான்
அதேபோல் நாபியில் - சந்திரனும்
வலதுதொடையில் - செவ்வாயும்
வலதுகையில் - புதனும்
வலதுமேல்கையில் - சனியும்
தலையில் - குருபகவானும்
இடதுகீழ்கையில் - சுக்ரனும்
இடதுமேல்கையில் - ராகுவும்
இடது தொடையில் - கேதும் இடம்பெற்றுள்ளனர் ..

எனவே ! விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிட்டும் ..
வெற்றிவிநாயகரைப் போற்றுவோம் தடைகள் அனைத்தையும் தகர்த்தி வெற்றி காண்போமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ ” வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment