PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..




GOOD MORNING DEAR FRIENDS . WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE ' SHASHTI THITHI ' TOO .. MAY LORD MURUGA RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE & PROSPERITY .. " OM MURUGA "

” நாளென்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோளென்செயும் !
கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் ஷண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் வந்து தோன்றிடினே ”

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
குருவருளும் இறையருளும் கூடிய இந்நன்னாளில் வளர்பிறை சஷ்டித்திதியும் கூடிவருவது சிறப்பு ..
வல்வினைகளை களைந்து நிம்மதியும் சந்தோஷமும் தங்கள் வாழ்வில் என்றும் திகழ கந்த்ப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் !

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோத்யாத் !!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர்.. மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது
ஆட்சி செய்கிறார் ..

தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர் ..
கந்தனைக் கரம்குவித்து வணங்குவோர்களுக்கு கலியின்
கொடுமையும் காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது ..

Image may contain: 5 people, people standing 
நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வான் .. பிள்ளையைப் போல பிரியம் காட்டுவான் ,, என்று கந்தசஷ்டி கவசம் கூறுகிறது ..
“ என்னைப் பெற்றவன் நீயே ! என்பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன்கடமை ! என்று கந்தஷஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார் ..

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றான் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகின்றது .. மனிதனின் மனதை வாட்டுகின்ற ஆணவம் .. கன்மம் .. மாயை எனப்படும் மூன்று மலங்களே அவை .. நமது மனதிலே தோன்றி நம்மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து தீய எண்ணங்களை அழித்து சிறப்பாக வாழ வழிவகுக்கின்றது ..

சங்கரன் அருளால் ஆறுமுகம் பெற்று ..
சக்தியின் துணையால் சக்திவேலனைப் பெற்று ..
சூரனை அழித்து ஆட்கொண்ட ஆறுமுகனை சஷ்டித்திதியில் வணங்கி வழிபட்டால் தீயகுணங்களையும் .. துன்பங்களையும் அழித்து நம் அனைவரையும் தடுத்தாட்கொள்வான் ..

“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

 Image may contain: 1 person, beard

No comments:

Post a Comment