SWAMI SARANAM...GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " RATHA SAPTHAMI DAY " & A DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA .. WORSHIPPING LORD SURYA ON THIS DAY IS VERY SACRED & CELESTIAL & HIGHLY BENEFICIAL .. RATHA SAPTHAMI ALSO MARK THE BIRTH OF LORD SURYA & HENCED CELEBRATED AS SURYA JAYANTI .. MAY LORD SURYA BESTOW ON ALL WITH GOOD HEALTH .. WEALTH .. PEACE & PROSPERITY .. " JAI SURYA DEV "

 முடிபுனைந்து அரும்பொற்பைம்பூண் முயங்க 
மெய்முழுவதும் பூண்டு வடியிசை மறைபுகன்று மாதவர் அங்கி ஓம்பக் கொடி அணி நெடுந்தேர் ஏறிக் குலம்படு கமலமங்கை கடிமணம் செய்யத்தோன்றும் 
கதிரவன் திருத்தாள் போற்றி ! போற்றி “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று உலகிற்கே ஒளிதரும் சூரியபகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானதும் .. பாவங்களை விலக்கி செல்வ வளம் தந்தருளும் ” ரதசப்தமி ” விரதநாளுமாகும் .. தங்களனைவரும் சூரியபகவானின் 
அருட்கடாக்ஷ்ம் பெற்று அனைத்து தோஷங்களும் நீங்கி 
மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

தெற்குப்பாதையில் பயணிக்கும் சூரியன் .. ரதசப்தமி தினத்தன்று வடக்குவழியில் திசைதிரும்பிப் பயணிக்கிறது .. அதாவது தட்சிணாயனகாலம் முடிந்து உத்தராயணகாலம் ஆரம்பிக்கிறது .. 

ரதசப்தமிநாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும் அன்றையதினத்தில் விரதம் கடைபிடித்து சூரியபகவானை வழிபடவேண்டும் .. 

இன்றையநாளில் சூரிய உதயநேரத்தில் எழுந்து ஆறு .. ஏரி அல்லது குளத்தில் நீராடச்செல்வது சிறப்பு .. இயலாதவர்கள் அவரவர் இல்லங்களிலே சிறிதளவாவது சூரியஓளிபடும் இடத்தில் நீராடலாம் .. 

நீராடும்போது 7 எருக்கம் இலைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அவற்றின் மீது சிறிது அரிசி .. ம்ஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக்கொண்டு நீரில்மூழ்கி எழவேண்டும் .. வீடுகளில் நீராடும்போது அவற்றை தலையில் வைத்துக்கொண்டபின் தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம் .. 

“ ஸப்த ஸப்தி ப்ரியேதேவி !
ஸப்த லோகைக பூஜிதே ! 
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர
ஸப்தமி ஸத்வரம் ”
எனும் துதியை ஸப்தமி திதியாகிய இன்று கூறியபடி ஸ்நானம் செய்யவேண்டும் .. 

அதன்பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்குதிசை நோக்கியோ ”த்வாக்ராய நம இதமர்க்யம்”
என்று மும்முறை சொல்லி சூரியபகவானுக்கு அர்க்யம் கொடுக்கவேண்டும் .. 
சூரியவழிபாடு நல்லகுணங்களையும் .. நல்லாரோக்கியத்தையும் தரும் .. நோய்கள் நீங்கும் .. 
எருக்கம் இலை வாதத்தைப் போக்கும் .. 

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமிநாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார் இன்றையதினம் விரதம் இருப்பது சுமங்கலித்துவம் ஏழேழ் ஜென்மத்துக்கும் நிலைக்கச்செய்யும் .. 
சூரியபகவானைப் போற்றுவோம் ! சகலதோஷங்களிலிருந்தும் விடுதலை பெறுவோமாக ! 
“ ஓம் சூர்யாய நமஹ “ .. 
“ ஓம் நமோ ஆதித்யாய ஆயுள் ஆரோக்ய புத்திர் பலம் தேஹிமோ சதா “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 1 person

No comments:

Post a Comment