GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " BHISHMA ASHTAMI DAY " .. TODAY IS THE DEATH ANNIVERSARY OF BHISHMA PITAMAH ONE OF THE GREAT INDIAN EPIC .. THE MAHABHARATA & THIS DAY KNOWN AS BHISHMA ASHTAMI .. BHISHMASHTAMI IS ASSOCIATED WITH BHISHMA PITHAMAH WHO BOWED FOR CELIBACY & FOLLOWED IT THROUGHOUT HIS LIFE DUE TO HIS LOYALTY & DEVOTION TO HIS FATHER PITAMAH WAS BLESSED WITH BOON TO CHOOSE THE TIME OF HIS DEATH .. MAY HE BLESS YOU ALL FOR THE BEST .. " OM SHREE BHISHMAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வளர்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று தந்தையின் விருப்பத்திற்காக தன் இளமையைத் துறந்து .. அனைத்தையும் தியாகம் செய்த “ பீஷ்மர் “ .. “பிதாமகர் “ என்றழைக்கப்படும் சந்தனு மகாராஜாவினதும் .. அன்னை கங்காதேவியின் புத்திரனுமாவார் ..அவரது மறைவு நாளே பீமாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது .. அவரை இன்று பிரார்த்தித்து அவரது அருட்கடாக்ஷ்த்தையும் .. வாழ்வில் சுபீட்சத்தையும் பெறுவோமாக !
” கங்கையின் மைந்தன் காங்கேயன் ”என்றும் ..
“ பிதாமகர் “ என்றும் போற்றப்படுபவர் பீஷ்மர் .. இளவரசனான இவர் தனது தந்தையான சந்தனுவிற்காக யாருமே செய்யமுடியாத தியாகத்தைச் செய்துள்ளார் .. தந்தையார் விரும்பிய பெண்ணை தந்தை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக தன் இளமையை விட்டுக்கொடுத்து .. அவர்களின் வாரிசுகள் அரசாளவேண்டும் என்பதற்காக தான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று சபதம் பூண்டு பிரம்மச்சரிய வாழ்க்கையை விரும்பி ஏற்றார் .

அவரது தியாகம் கண்டு அனைவருமே அதிசயித்து வானுலகினர் பூமாரி பொழிந்து “ பீஷ்ம ! பீஷ்ம “ என்று வாழ்த்தினர் .. “ பீஷ்ம “ என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் .. யாருமே செய்யமுடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள் ..
மகனின் தியாகத்தைப் போற்றிய சந்தனுமன்னன்
” எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்போது தான் உனக்கு மரணம் சம்பவிக்கும் “ என்ற “ இச்சாமிருத்யூ வரம் “ கொடுத்து வாழ்த்தினர் ..

பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர் .. இனி வருங்காலத்தில் பாரததேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் .. ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக்கொண்டு நீராடும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்க்கொள்வதோடு
பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியத்தையும் பெறுவர் .. என்று வியாசர் கூறியுள்ளார் ..

பிரம்மச்சாரியான பீஷ்மர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால் அவர்மீது அன்புகொண்டவர்கள் .. தகப்பனார் உள்ளவர்கள் .. இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுப்பதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது ..
பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவங்கள் நீங்கும் .. குடும்பத்தில் சுபீட்சம் ஏற்படும் .. எடுத்தகாரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை .. பீஷ்மாஷ்டமி நாளில் யார்வேண்டுமானாலும் பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்னு விசேஷமாகும் ..
ஸ்லோகம் -
“ வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி பீர்வராயச்
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜநம !
ப்ரஹ்ம சாரினே ! பீஷ்மாய நமஹ .. இதமர்க்யம் ..
என்று சொல்லி நீர் விடவேண்டும் ..

ஓம் பீஷ்மாய நமஹ “ என்று போற்றுவோம் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



 

No comments:

Post a Comment