SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM


” சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவசிவ என்னச் சிவசக்தி தானே “ - திருமூலர் -

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் சிறப்பான விரதங்களுள் ஒன்றாகிய ‘சோமவார விரதமும்’ அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறிடவும் .. ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

ஈசனையும் .. சந்திரனையும் குறிக்கும் சோமவாரவிரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது .. தட்சனின் சாபத்தால் ஒளி குன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறை தொடர்ந்து வளர அருள் செய்தார் ..
சந்திரனும் சிவனிடம் “ இறைவா “ சோமவாரம் மேற்கொள்வோரும் .. இந்நாளன்று ஈஸ்வரனை வழிபடுவோருக்கும் நற்கதியைக் கொடுத்தருளும்படி வரம் கேட்டான் .. அப்படியே ஆகட்டும் என வரமளித்து வாழ்த்தியருளினார் ..
வாரம்தோறும் வரும் திங்கட்கிழமைகளில் ஈசனைப் போற்றித்துதித்து ஆயுளோடு ஆரோக்கியமான வாழ்வினையும் பெற்றுய்வோமாக !
“ ஓம் சிவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE
" SOMVAR VIRADAM " & A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE SINS & PAINS FROM YOUR LIFE & SHOWER YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE & PROSPERITY ..
" OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..

No comments:

Post a Comment