PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE " BHISHMA EKADASI " BHISHMA EKADASHI IS OBSERVED IN THE JAN - FEB MONTH .. THE POPULAR BELIEF IS THAT THE " VISHNU SAHASRANAM STOTRAM " WAS REVEALED TO THE PANDAVAS ON THIS DAY BY BHISHMA THE GREAT GRAND FATHER IN THE MAHABHARATA .. WHILE HE WAS LYING IN A BED OF ARROWS AFTER THE GREAT WAR IN MAHABHARAT .. CHANTING VISHNU SAHASRANAMAM ON THIS DAY IS CONSIDERED HIGHLY MERITORIOUS .. " JAI SHREE BHISHMAYA NAMAHA "

ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீதவஸ்த்ரம்
ஸரஸீரு ஹேக்ஷ்ணம் ஸஹார வக்ஷ்ஸ்தல சோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் “
- விஷ்ணுசஹஸ்ரநாமம் -

பொருள் - சங்கு சக்ரம் தாங்கி கிரீடமும் குண்டலும் அணிந்து பொன்னாடை தரித்த தாமரைக்கண்ணனாய் கௌஸ்துப மாலை பிரகாசிக்க நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹாவிஷ்ணுவை தூய்மையான பக்தியுடன் தலைவணங்கி நமஸ்கரிக்கின்றேன் !

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய ஏகாதசியை
“ பீஷ்ம ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. தங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறிடவும் ஸ்ரீமன் நாராயணனை
பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

தைமாத சுக்லபக்ஷ் ஏகாதசி திதி “ பீஷ்ம ஏகாதசி “ என்று சிறப்பிக்கப்படுகின்றது மஹாபாரதப் போரில் அர்ஜுனன் தொடுத்த கணைகளால் அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட பீஷ்மப் பிதாமஹர் பாண்டவர்கள் போரில் வென்றதையும் ஹஸ்தினாபுர அரியணை பாதுகாப்பாக இருப்பதையும் அறிந்த பீஷ்மாஷ்டமியன்று தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று முக்தியடைந்தார் .. அவ்வாறு முத்தியடைவதற்கு முன்பாக பாண்டவர்களுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களைப் போற்றும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளினார் ..

பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும் ராஜதந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார் .. தன்னைச்சுற்றி நின்றிருந்த கூட்டத்தில் பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார் .. ஸ்ரீமன் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக
பூமியில் அவதரித்திருந்த உண்மையை பீஷ்மர் உணர்ந்திருந்தார் . ஸ்ரீமந்நாராயணனின் விஸ்வரூப தோற்றமும் அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும் அவற்றுக்குரிய நாமங்களும் பீஷ்மருடைய மனக்கண்முன் அப்போது தோன்றின இதனால் பக்திப்பரவசம் அடைந்த பீஷ்மர் ஸ்ரீமந்நாராயணனின்
பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார் அதுவே “ ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம் “ எனும்
மஹிமைமிக்க மந்திரத் தொகுப்பு ..

வையகத்தில் முறையாக உயர்குணங்களோடு ஒருவர் வாந்தாரெனில் அத்தகைய மனிதரை தேவர்களும் வணங்கி தம் நிலைக்கு உயர்த்துவர் என்பதே அது .. ஸ்ரீமத் பகவத்கீதையை ஸ்ரீகிருஷ்ணர் யாருக்கு அருளினாரோ அந்த அர்ஜுனன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உரைக்கவில்லை .. மஹாத்மாவான பீஷ்மருக்கே மோக்ஷ்த் திறவுகோலான போற்றத்தகுந்த ஆயிரம் திருநாமங்களை நமக்கருளும் நற்பேறு கிட்டியது .. அதன்பலனாக பரமபதமும் அடைந்தார் அவர் ..

இறைவனின் திருநாம மஹிமையைப் போற்றி .. பீஷ்மரே!
உம்மைப்போல் திடவைராக்கியம் தாரும் என வேண்டுவோமாக ! ஓம் பீஷ்மாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 7 people



No comments:

Post a Comment