PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " PRADOSHAM " WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE RELIEVE YOU FROM ALL SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE & FULFILL ALL YOUR WISHES TOO .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH


” வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரொடு கடைந்த
பொழுதெழுந்த நஞ்சங்கண்டு பல்தேவரஞ்சி அடைந்து
நும் சரணமென்ன அருள்பெரி துடையராகி தடங்கடல்
நஞ்சமுண்டார் சாய்க்காடு மேவினாரே “ 
திருநாவுக்கரசர் _
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
பிரதோஷதினமாகிய இன்று கருணாமூர்த்தியான சிவனைத் துதித்து தங்களனைவரது அனைத்து துன்பங்களும் .. தோஷங்களும் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தநோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் என்பது தேவர்களை ஆலகால விஷத்திலிருந்து சிவபெருமான் காத்தருளிய நாளாகும் 
சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது பிரதோஷம் .. இவ்விரதத்தை அனுஷ்டித்தே பல துன்பங்களில் இருந்தும் நீங்கி இன்பத்தை எய்துவர் .. பிரதோஷ நேரத்தில் 
மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலநேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால் கேட்ட கோரிக்கை பலிக்கும் .. என்பது நம்பிக்கை ..
பிரதோஷ வேளையில் கருவறை ஈசனை நந்தியின் இருகொம்புகளுக்கூடாக தரிசிக்கவேண்டும் அங்கேதான் தேவர்களுக்கு சந்தியா நிருத்தத்தை ஈசன் ஆடிக்காட்டியருளினார் ..
தோஷம் என்றால் - குற்றமுள்ள என்று பொருள் ..
பிரதோஷம் என்றால் - குற்றமில்லாதது .. 
குற்றமற்ற அந்தவேளையில் ஈசனைத் தொழ நம் தோஷங்கள் நீங்கும் .. ஈசன் விஷத்தை உண்டு சயனித்து
பிறகு எழுந்து முதன்முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில் என்பதால் தான்
சனிப்பிரதோஷம் சிறப்புமிக்கதாயிற்று ..
ஆலகால விஷத்தைக் கண்டு பயந்து தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்த்தும் வகையில் பிரதோஷவேளையில் சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யப்படுகிறது .. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர் ..
ஈசன்பாற்கடலில் இருந்து வெளிவந்து ஆலகால விஷத்தை உண்டபோது அதன் உஷ்ணம் அவரைத்தாக்காமலிருக்க அசுவினி தேவர்கள் மயில்பீலி 
ஆலவட்டத்தை வீசினர் .. அதன் நினைவாக இன்றும் பிரதோஷவேளையில் ( 4.30 - 600 மணிவரை) பல ஆலயங்களில் ஈசனுக்கு மயில்பீலி விசிறிகளால் வீசுகின்றனர் ..
பிரதோஷ விரதத்தை சிந்தை மகிழ கடைபிடிப்போம் முன்னைய வினைகள் அனைத்தும் நீக்குவோம் ! 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment