PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY " THAIPOOSAM " & A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. THAIPOOSAM IS A HINDU FESTIVAL CELEBRATED BY THE TAMIL COMMUNITY .. THE WORD THAIPOOSAM IS A COMBINATION OF THE NAME OF THE TAMIL MONTH THAI & POOSAM WHICH REFERS TO A STAR NEAR THE LOCATION OF THE MOON DURING THE FESTIVAL .. THE FESTIVAL COMMEMORATES THE OCCASION WHEN PARVATI GAVE MURUGAN A " SPEAR " (VEL) SO HE COULD VANQUISH THE EVIL DEMON SOORAPADMAN .. " OM MURUGA "

மயில்மீதில் வருவாயே முருகா
மனமார அழைக்கின்றேன் இரங்காயோ குமரா .. ?
சிலையாக ஆனாயோ முருகா
மலைதோறும் மயிலோடும் வேலோடும் அமர்ந்து
வினைதீர்க்க வருவாயே முருகா
தாய்தந்த வேலோடு கணங்கூடச் சுணங்காமல்
தேவர்குறை தீர்க்க விரைந்து வந்தாயே !
சூரன் உயிர் மாய்க்க வீறுகொண்டாயே
அருணகிரிக்கு ஒருவாழ்வு தந்தாயே !
ஒளவைப் பாட்டிக்கு அருள்புரிந்தாயே
தந்தைக்குபதேசம் செய்தவன் நீயே
தாயின் வேல்தாங்கப் பிறந்தவன் நீயே !
தமிழின் தாலாட்டில் வளர்ந்தவன்
தரணியெங்கும் புகழ் சிறந்தவன் நீயே ! நீயே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும்
“ தைப்பூசத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து மன அமைதி கிட்டிட எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த விரதங்களுள் தைப்பூசம் மிகவும் சிறப்புவாய்ந்தது .. நமது வள்ளல்பெருமான் தைப்பூசநாளை ஞானத்தின் வெளிப்புற நாளாகக் காட்டினார்கள் .. காரணம் தைமாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்புவாய்ந்த தினமுமாகும் .. தைமாதத்தை “ மகரமாதம் “ என்று அழைப்பார்கள் .. மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது .. அகரம்+உகரம் = மகரம் = ஓம் ..
தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும்
மேற்கில் - முழுநிலவும்
ஞானசபையில் இருந்து - அக்னியான ஜோதியும் காண்பிக்கப்படும் .. இவை ஒரே நேர்கோட்டில் அமையும்
இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் ..

சந்திரன் என்பது - மன அறிவு
சூரியன் என்பது - ஜீவ அறிவு
அக்னி என்பது - ஆன்மா அறிவு
சந்திரன் சூரியனில் அடங்கி ..
சூரியன் அக்னியில் அடங்கி
அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே ! “ தைபூசம் “

மனம் ஜீவனில் அடங்கி
ஜீவன் ஆன்மாவில் அடங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் என்பதைக்காட்டவே தைபூசம் வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது .. மேலும் அதிகாலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மைத் தத்துவமாக வள்ளல்பெருமானால் விளக்கப்பட்டது ..
” அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை “ எனும் மகாமந்திரத்தை உலகுக்கு தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்ந்த்தி ஒரு தைமாத புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் இறைவனுடன் இரண்டறக்கலந்தார் ..

” ஓம் ஜெயஜெய மகாவீரபகவான் ஸ்ரீஸ்கந்தா ! நமோ நமஹ ! ஓம் ஜெயஜெய மகாஜோதி சக்தி சரவணபவாயி
நமோ ! நமஹ “
எனும் மந்திரத்தை சொல்லி தைபூசத்தில் ஷண்முகியாம் வேலாகிய ஜோதியை வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம் .. வேல்வழிபாடு முருகன் வழிபாடு மட்டுமல்ல
ஜோதிவழிபாடும் சக்திவழிபாடுமாகும் ..

சூரனை வதம்செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் பழனிமலையில் வேல்வழங்கி ஆசிவழங்கினாள் .. அதன்காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
வேல் ! என்பதும் ஜோதி ! என்பதும் வேறல்ல .. பார்வதிதேவியின் சக்தியிலிருந்து அவதரித்ததால் அந்த வேலாகிய ஜோதி ! முருகனுக்குத் தங்கையாகிற வேல் !
“ பிரம்மவித்யா சொரூபமானது “
சக்தியின் வடிவாய் .. சக்தியிடமே உருவான வேல் ! கந்தனின் தங்கை என்றும் அந்தவேலைத் தோற்றுவித்து
அன்னை அளித்த திருநாள் “ தைப்பூசத்திருநாள் “ என்றும்
போற்றி வழிபடுகிறார்கள் ..

முருகனையும் ஜோதியையும் (வேல்) எப்போதும் பிரிக்கமுடியாது .. எனவேதான் புராணங்களில் ஜோதியாகிய சக்திவேலை “ ஷண்முகி “ என்றும் போற்றுகின்றன .. இந்தவேல்தான் சூரபத்மனை இரண்டாகப் பிளந்து ஞானத்தை அளித்தது .. எனவே ! ஞானத்தின் அம்சம் வேல் ! அந்த வேலைத்தாங்குகின்ற முருகப்பெருமானாக “ ஞானவேல் முருகன் “ என்று போற்றுகின்றன ஆகமங்கள் ..
தைபூசத்தன்று முருகனைவழிபட்டு சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக !
“ சரணம் சரணம் ! சரவணபவனே சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No automatic alt text available.

No comments:

Post a Comment