PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM SARANAM...GURUVE SARANAM////GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSED POORNIMA TOO .. MAY LORD SHIVA GUIDE YOU & RELIEVE YOU FROM ALL SINS & EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH



சீலமுனிவோர்கள் செறியுமலை சிந்திப்பார் முன் நின்று
முக்திவழங்குமலை ஞானநெறி காட்டுமலை ஞானமுனிவோர்கள் நித்தம் நாடு மலை அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு மெய்ஞானச்சோதி
விளக்குமலை ஞானத் தபோதனரை வா ! என்று அழைக்குமலை ! அண்ணாமலை “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று பௌர்ணமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இந்நாளில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது சிறப்பாகும் .. தங்கள் ஊழ்வினைகள் நீங்கி .. மனக்கவலைகள் தீர்ந்து .. பாவங்கள் அனைத்தும் களைந்து மனநிம்மதியும் கிட்டிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றும் உணர்ந்த ஞானிகளும் .. யோகிகளும் தெரிவிக்கின்றனர் .. பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு 7 மணிக்குமேல் சுற்ற ஆரம்பிக்கும்போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின்மீது பட்டு .. கிரிவலம் செல்பவர் மீதும்பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் ..

சந்திரன் நம்மனதுக்கு (எண்ணத்திற்கும்) காரகன் .. பௌர்ணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ணநிலவாக அதிகக்கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகின்றான் .. இதனால் பௌர்ணமிகிரிவலம் செல்வது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்படுகிறது .. மேலும் நிலவொளி நம்மீதுபட்டால் அறிவு பலப்படும் .. மனக்குழப்பங்கள் நீங்கும் மற்றைய நாட்களைவிட தெய்வீகசக்திமிக்க மலைகளுக்கு பௌர்ணமியன்றே சக்திகள் அதிகரிக்கும் ..

கிரி என்றால் - மலை
வலம் என்றால் - சுற்றுதல் என்று பொருள் .. அதனால் மலையைச்சுற்றிவருவதையே கிரிவலம் என்றழைக்கின்றனர் .. இங்கு மலையே லிங்கவடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றிவருவதற்கு சமமாகக் கருதப்படுகிறது ..

இங்கு பலசித்தர்களும் .. வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர் வாழ்கின்றனர் .. பகவான் ரமணமகரிஷி அவர்கள் தன் இன்னுயிர் நீங்கும்வரை திருவண்ணாமலையில் வாழ்ந்ததார் ..

மலை வலம்வருவோம் ! மனநலம் பெறுவோமாக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 No automatic alt text available.
 

No comments:

Post a Comment