” பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று நாம் விரும்பிய வரங்களை விரும்பியவாறே தந்தருளும் எல்லாம் வல்ல இறைவன் ஈஸ்வரனைத் துதித்து கிரகதோஷங்கள் நீங்கி வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும் ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர் .. முதல்வனும் மூவரும் அவனே என்றும் .. மூவரும் அறியாதவர் என்னும் மிகபெரிய தத்துவத்தை சைவசித்தாந்தம் கூறுகிறது ..
சிவனை வழிபட்டோர்கள் உமாதேவி .. உருத்திரன் .. திருமால் .. பிரமன் .. பிள்ளையார் .. முருகன் .. தேவர்முதல் ராவணன் வரை எல்லோரும் அவன் அடிமை
சிவன் உருவாய் - நடராசன்
அருவுருவாய் - சிவலிங்கம்
அல்லுறுவாய் - நமக்கு காட்சி அளிக்கிறார் ..
சிவனுக்கு பிறப்பு .. இறப்பு இல்லை .. இருவினையும் இல்லை ..
புராணவரலாறு -
எதுதானம் .. ? .. எது தர்மம் .. ? என்பதனை சூரியபகவானுக்கு விளக்கிய ஈசன் ..
மகாபாரதத்தில் உடலை விட்டுப்பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரியதேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி சுவர்க்கபேறு பெற்றது .. ஆனால் .. சூரியதேவனுக்கோ மனதில் மிகப்பெரிய ஐயம் கலந்த வேதனை எவரிடம் கேட்பது ? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ..? குழப்பத்திலும் .. கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது ..
இதனை உணர்ந்த ஈசன் அவர் முன் எழுந்தருளி சூரியனே என்ன தடுமாற்றம் உன்மனதில் என ஈசன் கேட்க .. பரம்பொருளே ! இல்லை என கூறாமல் சகலவிதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என்மகன் கர்ணனை போரில் கொன்றது ‘விதி’ என்று ஏற்றுக்கொண்டேன் .. ஆனால் எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப்பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே ! பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது ? இது அநீதி அல்லவா ? எனக்கேட்டார் சூரியத்தேவன் ..
ஈசன் நிறைய மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்துள்ளது .. சொல்கிறேன் கேள் என்றார் ..
” தானம் “ என்பது - பிறருக்குத் தேவையானவற்றை அவர்கேட்டோ .. அடுத்தவர் அவர் நிலைகூறி அறிந்தபின்னோ தருவது தான் தானம் .. இது புண்ணிய கணக்கில் சேராது .. ஏனெனில் இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை .. ஒவ்வொரு மனிதனின் கடமையும்கூட ..
ஆனால் .. “ தர்மம் “ என்பது - எவரும் கேட்காமல் .. அவரே அறியாமல் .. அவர் நிலை அறிந்து கொடுப்பது .. இதுதான் புண்ணியம்தரும் ..
” பசித்திருக்கும்ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம் “
” அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம் “
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான் .. ஆனால் .. மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர
தர்மமாகப் பெறவில்லை .. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரைவார்த்து தந்தபிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான் .. அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது புரிந்ததா என்றார் ..
இதைக்கேட்ட சூரியதேவன் இறைவா ! நன்கு புரிந்தது .. தானமும் .. தர்மமும் ..பாவமும் .. புண்ணியமும் எல்லாமும் “ சிவனே “ என்பதை உணர்ந்தேன் ..
ஈசன் சொன்ன விளக்கம் சூரியதேவனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நன்றாக புரிந்திருக்கும் ..
ஈசனைப் போற்றுவோம் ! மனநிம்மதி பெறுவோமாக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment