SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SADURTHI THITHI & A DIVINE KIRTHIKAI TOO .. MAY LORD GANESHAA & LORD MURUGA BLESS YOU & GUIDE YOU & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. JAI SHREE GANESHAAYA NAMAHA ..



” ஓம் “ எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகின்றேன் ! பூதகணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே ! இடையூறுகளை இல்லாது செய்பவரே ! அழகான நீண்ட துதிக்கை உடையவரே ! யானையின் முகங்கொண்டவரே ! கங்கா கௌரி என்ற இரண்டு தாய்களைக் கொண்டவரே ! பக்தர்களுக்கு என்றும் குறைவில்லா அருள்பொழிபவரே ! ஒரு தந்தம் கொண்டவரே ! அழகிய பெரிய யானையின் காதுகளைக் கொண்டவரே ! உலக மக்களைக் காக்கும் முதல் கடவுளே!
பரமன் உமாவின் புத்திரரே ! உனக்கு எமது வணக்கங்கள் !
எமது பிரச்சினைகளையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ வழிகாண்பிப்பீராக ! 
( சதுர்த்தி தினங்களில் எல்லாச் செயல்களிலும் வெற்றி பெற சொல்லவேண்டிய விநாயகர் துதி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம் தோறும் அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று சதுர்த்தித் திதியும் .. கிருத்திகை நட்சத்திரமும் ஒன்றுகூடி வருவது மிகவும் சிறந்ததாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்நாளாகத் திகழவும் .. சிறந்த கலவி அறிவும் .. தெளிந்த ஞானமும் .. சிறந்த செல்வமும் துன்பங்கள் விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திடவும் விக்ன விநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
சர்வலோகேஸ்வரனான பரமசிவனின் அன்பிற்கு உரிய புதல்வர்களான விநாயகரும் .. கந்தப்பெருமானுமே ! 
இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால் .. விநாயகர் பிரம்மாவின் வடிவம் .. விநாயகப் பெருமான் நரசிம்மப்பெருமானைப்போல .. தேவ .. மனித .. பூத .. மிருக .. சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் .. அவரது திருமுகம் யானைவடிவம் .. அவரது திருக்கரங்கள் தேவ வடிவம் .. அவரின் மேனி மனிதவடிவம் .. அவரது திருவடிகள் பூதவடிவம் என்பார்கள் ..
அவர் மயூரேசராக மயிலேறி வலம்வரும்போது பறவையினத்தையும் .. அவர் இணைத்துக் கொள்கிறார் .. ஆக சகல உயிர்களின் இணைப்பைச் சித்தரிப்பது போல பிள்ளையார் வடிவம் அமைகிறது ..
காவேரியில் நீர் பெருகி கரையுடைந்து வந்துவிட்டால் கடைசியிலே கொள்ளுமிடம் கொள்ளிடம் .. கார்த்திகையில் பிறந்தவன் நம் கவலையெல்லாம் தீர்ப்பது 
தான் கந்தன் என்று சொல்லும் ஒரு சொல்லிடம் .. 
கந்தா ! என்று சொல்லுங்கள் ! இந்தா ! என்று வரம் தருவான் கருணைமிக்க கார்த்திகேயனே ! 
தும்பிக்கையானையும் கந்தப்பெருமானையும் நம்பிக்கையுடன் போற்றுவோம் ! தன்னம்பிக்கையுடன் செயலாற்ற எமக்கு துணைபுரிவார்களாக ! 
ஓம் கணேஷா போற்றி ! ஓம் கந்தா போற்றி ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 


SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATHI & MAY THE GOD OF WISDOM ENLIGHTEN YOUR LIFE & MIND & RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES TOO .. " JAI SHREE BRIHASPATHI GURUDEV "





மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் 
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டிலுக்கதிபனாகி 
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப்பாதம் போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இவ்வியாழக்கிழமையாகிய இந்நாளில் குருபகவானைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களனைத்தும் நீங்கி .. கல்வி வேள்விகளில் சிறந்துவிளங்கவும் .. வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று நிம்மதியான வாழ்வு அமைந்திட பிரஹஸ்பதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரத்யதிதேவதா ! 
ஸஹித ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
வியாழபகவானுக்கு “ குரு “ என்றும் .. “ ப்ரஹஸ்பதி “ என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன .. ப்ரஹஸ்பதி என்றாலே அறிவில் மிகச்சிறந்தவன் என்று பொருள் .. நவக்கிரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு அம்சமாகும் .. அன்றாடம் நாள் .. நட்சத்திரம் .. திதி .. ராகுகாலம் .. எமகண்டம் .. சுபஹோரைகள் என்று பார்ப்பதில் ஆரம்பித்து .. எதை செய்யவேண்டுமென்றாலும் ஜாதக கிரகநிலைகள் பார்ப்பதுவரை கடைபிடிக்கப்படுகிறது ..
கிரகயோகங்கள் பெறவும் .. தோஷ .. தடைகள் .. பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள் .. ஹோமங்கள் .. வழிபாடுகள் .. நேர்த்திக் கடன்கள் .. கிரக பரிகார பூஜைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன .. முறையாக இவற்றை செய்வதன் மூலம் தடைகள் .. தாக்கங்கள் குறைவதுடன் .. உடலும் .. உள்ளமும் தூய்மையாகி அமைதியும் .. சந்தோஷமும் கிடைக்கும் .. தோஷ நிவர்த்திக்கும் .. யோகபலன் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமாகும் ..
ஒருவரின் அதிர்ஷ்டநிலையின் அளவீட்டை நிர்ணயம் செய்வதும் குருவே ! இதுதவிர பொருளாதார உயர்வு .. பிறர் நம்மை மதிக்கும் நிலை .. புத்தியின் தெளிவு .. ஆகிய பல்வேறு விஷயங்களில் அவரது பங்களிப்பு பெருமளவு உண்டு .. வக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு .. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார் .. எனவே இவரது பார்வை எந்த ராசியின்மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும் ..
ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறதென்றால் அந்த ராசிக்கு குருபார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே “ குருபார்க்க கோடிநன்மை “ என்கிறார்கள் .. குருபகவானை பக்தியோடு மனதார போற்றி சங்கடங்கள் யாவும் களைவோமாக .. 
“ ஓம் ப்ரஹஸ்பதியே நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: one or more people, flower and plant

GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A HAPPY UGADI FESTIVAL & MAY THIS UGADI BRING YOU NEW SPIRIT .. NEW BEGINNING & PROSPERITY IN YOUR LIFE

” தாமரையில் அமர்ந்திருப்பவளே ! 
கையில் தாமரை வைத்திருப்பவளே ! 
பட்டு ஆடை .. சந்தனம் .. பூக்கள் அணிந்தவளே ! 
பகவதியே ! ஹரிபத்தினியே ! அழகியே ! 
எல்லோருக்கும் செல்வத்தை வாரிவழங்கி அருள்புரிவாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. யுகாதித் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. 
“ யுகாதி சுபக்காஞ்சலு “ 
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. அனைவரும் ஒற்றுமையுடனும் .. சகல ஐஸ்வர்யங்களைப் பெற்று வளமோடு வாழ அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
யுகாதி என்றால் யுகத்தின் ஆதி .. ஆரம்பம் என்று பொருள் 
யுகாதி பண்டிகை அன்றுதான் பிரம்மா உலகத்தைப் படைத்ததாகக் கூறுவார்கள் .. புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகவும் .. கொண்டாடப்படுகிறது .. புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வைத் தூண்டுவதாகவும் அமையவேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்பு பெறுகிறது ..
சைத்ர மாதத்தின் முதல்நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படித்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது .. இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது ..
யுகாதி தினம் புதிய வேலை .. கல்வி தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது .. வசந்தகாலத்தின் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது .. யுகாதி அன்று ஆறு சுவைகள் கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள் .. வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக யுகாதி பச்சடி அமைகின்றது ..
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி .. கவலை .. கோபம் .. அச்சம் .. சலிப்பு .. ஆச்சர்யம் .. கலந்தது என்பதனை உணர்த்தும் வகையில் .. 
கசப்புக்கு - வேப்பம்பூ 
துவர்ப்புக்கு - மாங்காய் 
புளிப்புக்கு - புளிபானகம் ..
உரைப்புக்கு - மிளகாய் அல்லது மிளகு 
இனிப்புக்கு - வெல்லம் 
ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள் .
இந்த புத்தாண்டு மகிழ்ச்சி .. துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும் .. மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல .. துக்கமும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும் .. புத்தாண்டு தினத்தன்று வீட்டு பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசீர்வாதத்தைப் பெறுவது சிறப்பு ..
“ ஒற்றுமையும் .. சகோதரத்துவமும் ஓங்கட்டும் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

PANVEL BALAGAN PATHAM POTRI GURUVE SARANAM SARANAM





பாலகன்  நாமம் சொல்லச் சொல்ல 
வினை தீரும் மெல்ல மெல்ல
குறையேதும் இல்லை இல்லை
குருசுவாமி  பாதம் பற்றப் பற்ற
கடிவாளம் இல்லாப் பரியாய்

அலை மோதும் உள்ளம் தன்னை
அடக்கும் கரமாய் அய்யன்
பிடிவாதம் கோபம் வெறுப்பு எல்லாம்
கடிந்தே நீ அகற்றிடுவாய்
சரணத்தால்  பாவம் போக்கி
சுகம்  தனைத் தந்த அப்பன்
பொன் சிலையில் உயிர் இருக்கும்
அதைக் கண்டதும் எம் மனம் இளகும்
பற்பல அதிசயம் நிகழும்
பன்வேல் பாலகன் சந்நதியில்
எனையாளும் அய்யனே போற்றி
துணை நிற்கும் குருவே போற்றி 

GOOD MORNING..SWAMIYE SARANAM IYYAPPA...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE " VASANT NAVARATRI " TOO .. MAY MAA SHAKTHI SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. JAI MATA DI ..


” மங்கள ரூபிணி மதிஅணி சூலினி மன்மத பாணியளே ! 
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ! ஜெய ஜெய சங்கரி ! கௌரி கிருபாகரி ! துக்க நிவாரணி காமாக்ஷி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று சக்திதேவியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றாகிய 
“ வசந்த நவராத்திரியின் “ ஆரம்ப நாளுமாகும் .. அன்னையை காமாக்ஷியாகவும் .. மீனாக்ஷியாகவும் வழிபடுவது முதல் நாளாகிய இன்று மிகவும் சிறப்பைத்தரும் ..தங்களனைவரது துக்கங்களைக் களைந்து மனதில் ஆனந்தமும் .. வாழ்வில் என்றும் சுபீட்சத்தைத் தந்தருளுமாறு அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் உந்நித்ரியை வித்மஹே ! 
ஸுந்தப ப்ரியாயை தீமஹி ! 
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் !!
தேவி வழிபாடு என்பது சக்தியை .. அம்பிகையை .. அகிலாண்ட நாயகியை .. அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும் .. தேவிவழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான் ..
குளிர்கால (புரட்டாசிமாதம்) ஆரம்பமும் ..
கோடைகால (பங்குனி மாதம் ) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளிலும் படாமல் அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்புசக்தி பெற்று நீண்ட நல்வாழ்வு வாழ அருளக்கூடியவள் .. அம்பிகை மட்டுமே !
வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள் .. இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும் .. அந்த ருதுக்களில் 
“ ரிதூநாம் குஸுமாகர “ என்று ஸ்ரீகிருஷ்ணபகவானால் சொல்லப்படுவது .. வஸந்த ருது பருவங்களில் சிறந்ததாகச்சொல்லப்படுவதும் வஸந்த ருது இதுவே வசந்தகாலம் .. வாழ்வில் வசந்தம் தொடங்கக்கூடிய காலம் வயல்களில் அறுவடை முடிந்து வளம் பொங்கக் கூடிய காலம் மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும்
காலம் !!
பொதுவாக வட இந்தியாவிலும் .. தென் இந்தியாவிலும் சிலகோவில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி .. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்திநிலையைத்தரக்கூடியது .. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும் .. ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பெறும் .. ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சிதருவாள் ..
வசந்த நவராத்திரியில் வழிபட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியே ! கன்னியர் பெறுவது திருமணப்பயன் .. எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தியே ! சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள் ..
காமாக்ஷி என்றால் கருணையும் .. அன்பும் நிறைந்த கண்களுடையவள் என்று பொருள் .. கையில் கரும்பு ..வில் 
தாமரை .. கிளி .. ஆகியவற்றை ஏந்தி இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோகநிலையில் அமர்ந்திருப்பது மிகச்சிறப்பான அம்சம் .. மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகுசிறப்பாக கொண்டாடப்படும் .. அன்னை காமாக்ஷியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்று உணரலாம் ..
வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அன்னை காமாக்ஷியையும் .. மினாக்ஷியையும் வழிபட்டு அன்னையின் பரிபூரண அருளைப் பெறுவோமாக .. ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் 
 


PANVEL BALAGAN PATHAM POTRI.....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " SOMAVARA AMAVASYA VIRADAM " TOO .. MAY THE BLESSINGS OF LORD SHIVA ALWAYS BE WITH YOU & SHOWER YOU WITH PROSPEROUS & FREE OF DISEASES & GRIEF & SORROWS FROM YOUR LIFE .. " OM NAMASHIVAAYA "


” சிவாயநம வென்றாலே ! சிந்தை தெளியும் ! 
அவாவும் அகன்றே அழியும் ! சிவாய நம வென்னும் பெயரே தான் வெற்றிக் கடித்தளம் ! என்றும் துதிப்பாய் எழுந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையுமாகிய இன்று அமாவாசைத் திதியும் கூடிவருவதால் சோமவார விரதத்தை “அமாசோமவாரம்”
என்றழைப்பார்கள் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிதுர்தோஷங்கள் அகன்று .. உற்றம் சுற்றத்தில் உள்ள மனக்கசப்புகளைத் தீர்த்து மன அமைதியையும் தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
” அமாசோமவாரம் “ எனப்படும் திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று அரசமரத்தை விடியற்காலை சூரியோதயத்திற்கு முன்பாகவே வலம்வர ஆரம்பிக்கவேண்டும் .. ( 6-7 ) ஆனால் இம்முறை அமாவாசைத் திதி சூரியோதயத்திற்குப் பின் காலை 10.00 மணியளவில் வருவதால் அரசமரத்தை வலம்வரமாட்டார்கள் ..
அரசமரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகவும் .. இம்மரம் விஷ்ணுபகவானின் வலது கண்ணிலிருந்து தோன்றியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன ..
” மூலதோ ப்ரம்மரூபாய ! 
மத்யதோ விஷ்ணு ரூபிணே ! 
அக்ரத சிவரூபாய ! 
வ்ருஷ ராஜாயதே நமஹ “
பொருள் -
அரசமரத்தின் வேர்பாகம் படைக்கும் கடவுளான - பிரம்மாவாகவும் ..
நடுவே உள்ள தண்டு பகுதி - காக்கும் கடவுளான விஷ்ணுபகவானாகவும் .. 
மேலுள்ள கிளைகள் . இலைகள் .. உள்ள மேற்பகுதி - அழிக்கும் கடவுளான சிவபெருமானாகவும் கருதப்படுகிறது .. 
வ்ருஷம் என்றால் - மரம் 
 ராஜா என்றால் - அரசன் 
அதனால் மரங்களுக்கு ராஜா என்று குறிப்பிடப்படும் இந்த மரத்தையே வேதங்கள் “ அரசமரம் “ என வர்ணிக்கிறது ..
இந்த மந்திரம் கூற இயலாதவர்கள் “ ஓம் நமசிவாய “ அல்லது “ ஓம் நமோ நாராயணாய “ என்று கூறி மரத்தை 108 முறை வலம்வரலாம் .. அமாவாசை தினத்தில் அரசமரத்திற்கு ஆகர்ஷண சக்தி அதிகம் .. திங்கள்கிழமையில் வரும் அமாவாசை அன்று பூஜித்தால் வாழ்வில் வசந்தம் வீசும் .. வளமான வாழ்வும் கிட்டும் ..
கோவில்களில் உள்ள அரசமரத்தடியில் நாகசிலைகளுடன் விநாயகரும் எழுந்தருளியிருப்பதால் அங்கு அபரிதமான சக்தி அதிகம் இருக்கும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசமரத்தைத் தொடக்கூடாது என்பது விதியாகும் ..
அரசமரத்திற்கு “ அஸ்வத்தா “ என்ற பெயரும் உண்டு .. அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது .. அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்வது தர்மசாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களேயாகும் ..
சோமவார தினமாகிய இன்று எல்லாம் வல்ல ஈசனைப் போற்றுவோம் ! ஆயுள்விருத்தியும் .. மன அமைதியும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 1 person


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE MONTHLY SIVARATRI TOO .. MAY YOUR SUNDAY BE FILLED WITH LOVE & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM





“ உமையவள் நேயனை உளமுருகி பணியுங்கள் !
இமைபோல் காத்திடுவான் ! இன்பங்கள் சேர்த்திடுவான் ! 
உயிர் அனைத்துள் உறையும் முழுமுதல் ஈசனை உருவமாய் அருவமாய் நிறைவுடன் துதியுங்கள் ! 
சித்தத்தை தெளியவைத்து சிந்தனையை சீர்படுத்தும் சிவகாமிநேயனை நித்தமும் துதியுங்கள் ! 
“ சிவ சிவ “ நாமத்தை சிந்தையில் இருத்துங்கள் ! 
செய்கின்ற காரியங்கள் செவ்வனே முடிப்பான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசித் திதியுமாகிய இன்று ஈசனுக்கு உகந்த மாத சிவராத்திரியும் கூடிவருவது சிறப்பாகும் .. சிவபெருமானைத் துதித்து மனதில் அமைதியும் .. சுபீட்சமான நல்வாழ்வும் தங்களனைவருக்கும் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவராத்திரி ஐந்துவகைப்படும் .. 
1 - நித்திய சிவராத்திரி 
2 - பட்ச சிவராத்திரி 
3 - மாதசிவராத்திரி 
4 - யோகசிவராத்திரி 
5 - மகேசனுக்கு உகந்த ” மகா சிவராத்திரியுமாகும் “
புராணங்களில் சிவராத்திரியைப் பற்றிப் பலகதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றுள் ஒன்றைக் காண்போம் ! 
கயிலாயத்தில் அன்னை பார்வதிக்கு ஒருநாள் ஏதோ விளையாட்டு புத்தியால் பின்பக்கமாக வந்து சிவனின் கண்களைப் பொத்த சகலபுவனங்களும் ஒளியிழந்து இருள்சூழ்ந்தது ..
அம்பிகை திடுக்கிட்டுத் தன்பிழையை உணர்ந்து சிவனைப் பிரிந்து பூலோகம் வந்து தன் பிழைக்குப் பிராயச்சித்தமாக காஞ்சிபுரம் கம்பநதிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜைசெய்கிறார் .. திடீரென்று கம்பநதியில் வெள்ளம் வர மணல் லிங்கம் கரைந்துவிடுமே என்று அஞ்சி அப்படியே சிவலிங்கத்தை ஆரத்தழுவிக்கொள்கிறாள் .. அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் ஏகாம்பரநாதராக அம்பிகையை 
(இங்கே காமாட்சி) மாமரத்தடியில் மணம்புரிந்துகொள்கிறார் .. அந்தத் திருநாளே சங்கரனைக் கொண்டாடும் சிவராத்திரி என்பார்கள் ..
சிவபெருமானே ! நீரே என் உயிர் ! என்மனமே பார்வதி !
என்கருவி கரணங்களே உமது சேவகர்கள் .. என்னுடலே உமது வீடு ! என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு ! என் கால் நடக்கும் பாதையெல்லாம் உமது கோயில் பிரகாரம் .. என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை .. மொழி .. இவ்விதம் என் எண்ணம் .. சொல் செயல் .. அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன் .. என்றும் பிரார்த்திப்போமாக !
நம் மனவீட்டில் விளக்காகத் திகழும் ஐந்தெழுத்து மந்திரம் “ நமசிவாயத்தை “ இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோமாக ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

GOOD MORNING...SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A BLESSED " SANI MAHA PRADOSHAM " WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE RELIEVE YOU FROM ALL SINS & NEGATIVE KARMA FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH


” பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற 
தானே அதை உண்டவரே ! வணக்கம் ! உலக ரட்சகரான மஹேஸ்வரனுக்கு வணக்கம் ! மணம் கமழும் சந்தனமயமான தேவிக்கு வணக்கம் ! உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமஹேஸ்வரனுக்கு வணக்கம் ! உமது ஆசியால் சகலவளமும் பெருகிட அருள்வீராக “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
“ சனிமஹா பிரதோஷ நாளாகிய இன்று தங்களுக்கு சனிபகவானால் உண்டாகும் சகலதுன்பங்களும் நீங்கி வாழ்வில் அனைத்திலும் வெற்றிகிட்டிடவும் .. சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

தேய்பிறையும் .. திரயோதசித் திதியும் கூடிய இந்நாளில் வரும் சனிப்பிரதோஷத்தை .. “ மஹா சனிப்பிரதோஷம் “
என்றழைப்பார்கள் .. இன்று சிவ வழிபாடு செய்தால் 12 ஆண்டுகளுக்கு மேல் சிவனை வழிபாடு செய்தபலன் கிடைக்கும் .. பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் சிறப்பாகும் .. 

துன்பத்தைப் போக்கவல்லது சனிப்பிரதோஷ வழிபாடு .. ஆனால் .. சங்கடங்கள் அனைத்தையுமே தீர்க்கவல்லது சனிமஹா பிரதோஷமாகும் .. மாலை 4.40 - 6.00 மணிவரையிலான காலநேரமே பிரதோஷ வழிபாடு செய்ய உகந்த நேரமாகும் .. புண்ணியமிக்க இந்நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரத்தை ஒருமுறையேனும் ஜபித்தாலும் அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும் .. 

“ ஓம் ஆம் ஹவும் சவும் “ என்ற மந்திரத்தை சிவாலயத்தில் ஒருமுறை ஜபிப்பதால் நாம் நமது முந்தைய ஏழுபிறவிகளிலும் .. நமது முன்னோர்கள் ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் .. அவற்றால் ஏற்பட்ட பாவங்களும் அழிந்துவிடும் .. 

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு - உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத்தெரிந்து கொள்ளவேண்டும் .. அழிவைத்தரும் ஆலகாலவிஷத்தை உண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது .. 

” பக்தார்த்தி பஞ்ஜனபராய பராத்பராய கலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரய காரணாய ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய ! 
( மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம் ) 

பொருள் - பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் ! 
பிரம்மாதி தேவர்க்களுக்கெல்லாம் மேற்பட்டவரே ! பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! 
பிரதமகணங்களுக்கு ஈஸ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூடவிஷத்தை
அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே ! 
ஹாலஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !! 

சனிமஹா பிரதோஷத்தில் இத்துதியை பாராயணம் செய்து சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெருகட்டும் .. “ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
Image may contain: one or more people 


SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE " PAPMOCHANI EKADASI " TOO .. PAP - MEANS - SIN .. MOCHANI - MEANS - REMOVAL .. THUS ONE WHO PRAYS THE MIGHTY LORD VISHNU ON THIS ' PAPMOCHANI EKADASI ' GETS RID OF THE NEGATIVE IMPACT OF SINS OR MISDEEDS COMMITTED IN THE PAST .. " OM NAMO NAARAAYANAAYA "


” அப்பாலுக்கு அப்பாலானவரும் நீதிமான்களில் தலைமையானவரும் அண்டியவரைக் காப்பவரும் அமைதியின் வடிவமானவரும் போற்றுதலுக்குரியவரும்
மகானுபாவருமான அந்த நாராயணனைத் துதிக்கின்றேன் 
காத்தருள்வானாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லங்கள் தோறும் அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று பகவான் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த “ ஏகாதசித் திதியும் ‘ கூடிவருவது சிறப்பாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்நாளாக அமைந்திடவும் 
அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுதலைப் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
கிருஷ்ணபக்ஷ்த்தில் (தேய்பிறை) வரும் ஏகாதசியானது 
“ பாபமோசினி ஏகாதசி “ என்று அழைக்கப்படுகிறது .. இந்த ஏகாதசியானது விரதத்தின் பிரபாவத்தால் மனிதர்களின் சர்வபாபங்களும் அழியப்பெறுவதுடன் நற்கதியும் கிடைக்கிறது ..
உடல் அழகு நிலையானதல்ல .. அப்படி இருக்க தேகசௌந்தர்யத்தின் மீது எற்பட்ட மையல் மேதாவிமுனிவரை தவசங்கல்பத்தை மறக்கச்செய்யும் கொடியபாவத்தை செய்யவைத்தது .. ஆனால் கருணாமயமான பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் அவருக்கு விடுதலை அளித்து .. தீவினையால் விளைந்த இன்னல்களை அழித்து காத்தருளியது ..
எவர் ஒருவர் நற்பணி (சத்கர்மா) செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டு பிறகு பேராசை .. மோகம் போன்ற தீயசக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார் .. ஆனால் பாபமோசனி ஏகாதசி விரதம் சகலபாவங்களிலிருந்தும் விடுதலை அளிப்பதுடன் இறுதியில் ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கிறது ..
பகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தினையும் பெற்றிடுவோமாக .. 
ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

PANVEL BALAGAN PATHAM POTRI......GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU MAY HIS ETERNAL BLISS BRINGS YOU EVERY SUCCESS IN YOUR CAREER & YOUR LIFE BE FILLED WITH LOVE & HAPPINESS TOO " OM NAMO NAARAAYANAAYA "


 என்னப்பன் எனக்காயிருளாய் என்னை பெற்றவனாய் ! 
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் 
மின்னப்பொன் மதில்சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன் தன்னொப்பாரில்லாரப்பன் தந்தனன் தனதாள் நிழலே “ 
( திருவோண நட்சத்திரம் வரும் நாட்களில் ஒப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய சிறப்பான ஸ்லோகம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவிற்கு உகந்த திருவோண நட்சத்திரமும் (மதியம்) கூடிவருவது
சிறப்பு .. பகவானைத் துதித்து தங்கள் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பெருகவும் .. அன்பும் ஒற்றுமையும் என்றும் நிறைந்திடவும் ஸ்ரீஒப்பிலியப்பனைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
“ ஸ்ரவண விரதம் “ என்பது மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பகவானுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு விரதமாகும் .. இந்நாளில் இறைவனுக்கு நெய்வேதனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்வது சிறப்பு ..
தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் இருக்காது .. வாழ்வில் அமைதி ஏற்படும்
உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவரும் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் .. கல்விச்செல்வம் .. பொருட்செல்வம் .. கேள்விச்செல்வம் 
பெருகும் ..
108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் ஸ்ரவணம் என்ற விழா பிரசித்தம் .. ” மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ 
என்னை சரணடைந்தால் ! உன்னை நான் காப்பேன் ! 
என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில்
வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 
“ தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் “ என்ற பதத்திலேயே ஒப்பில்லா அப்பன் ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் ..
ஸ்ரீமன் நாராயணனைப் போற்றுவோம் ! அவரது திவ்ய பொற்பாதங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 


SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM.......GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY & MAY YOU BE BLESSED WITH PEACE & HAPPINESS TOO .. " OM NAMO NAARAAYANAAYA "

 மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் ! 
அரியதற்கும் மேலாக அரிதானவன் ! 
மிகுந்த சக்தி உள்ளவன் நிரந்தரமானவன் 
எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ஒப்பற்றவன் 
முன்னைக்கும் முந்தையவன் ஒளிமயமானவன் 
ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றேன் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புதன்கிழமையாகிய இன்று அகில உலகத்திற்கும் ஆதாரமானவரும் .. பக்தர்களின் தாமரைப் போன்ற இதயத்தில் வசிப்பவருமாகிய ஸ்ரீமன்நாராயணனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்நாளாகத்திகழவும் .. நல்லாரோக்கியமும் பெற்று இனிதே வாழ்ந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
ஈரேழு உலகங்களையும் .. சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பைப் பெற்றவர் மஹாவிஷ்ணு .. உலக உயிர்களை காப்பதற்காகவும் .. தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் விஷ்ணுபகவான் எடுத்த அவதாரங்கள் பற்பல .. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பவன் என்று பொருள்படும் ..
வெண்மை நிறம்கொண்ட பாற்கடலில் வீற்றிருப்பதால் அவர் “ நாராயணன் ” என்றும் ..
“ நாரம் “ என்றால் - வெண்ணொற நீர் என்று பொருள் ..
“ அயனம் “ என்றால் - இடம் என்று பொருள் .. 
மஹாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார் .. அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம் ..
பக்திமார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவம் .. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .. பரிசுத்தமான பக்தியுடன் மஹாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்துவிட்டால் பக்தனின் அகங்காரம் அழிந்து .. ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியமே என்கிறது வைணவம் .. வைணவ வழிபாட்டில் 
“ ஓம் நமோ நாராயணாய “ என்ற அஷ்டாக்ஷ்ர மந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது ..
” அஷ்டாக்ஷ்ரம் “ என்பது - எட்டெழுத்தைக் குறிக்கும் .. 
ஓம் என்பது - ஓரெழுத்தாகவும் ..
நம என்பது - இரெண்டெழுத்தாகவும் 
நாராயணாய என்பது - ஐந்தெழுத்தாகும் ..
ஆகமொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷ்ரம் எனப்படும் ..
இதனைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும்
எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும் .. தீமைகள் .. துன்பங்கள் தொடராது .. முகவசீகரம் கிடைக்கும் .. எல்லாச்செல்வங்களும் கிட்டும் ..
பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! துன்பமற்ற பெருவாழ்வுதனை வாழ்வோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
 

SWAMI SARANAM.....GURUVE SARANAM SARANAM.......

 

 

அல்லல் அகற்றும் அஸ்திரபுரீஸ்வரர்

 
ஆனூர்

எங்கெங்கும் நிறைந்தவனான சர்வேஸ்வரன் கருணையின் பொருட்டு, லிங்கத் திருமேனியில் பல்வேறு தலங்களில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு தொன்மையான தலமே ஆனூர் ஆகும். பாலாற்றங்கரையிலுள்ள அழகான கிராமம். ஆதியில் இத்தலம் ஆனியூர், ஆதியூர், சத்திய குலகால சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. புகழேந்திப் புலவரும், கூற்றுவநாயனாரும் இத்தலத்திற்கு வந்து ஈசனை தரிசனம் செய்துள்ளதாக செவிவழி செய்திகள் கூறுகின்றன. இத்தலத்தில் அஸ்திரபுரீஸ்வரர் மற்றும் வேதநாராயணப் பெருமாள் இருவரும் தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கின்றனர். சுமார் 800 வருடங்கள் பழமையான திருக்கோயில் இது. அஷ்டபுரீஸ்வரர், அட்டபுரீஸ்வரர் என்றும் சிலர் இவ்வூரைக் குறிப்பிடுகின்றனர். உடல் முழுவதும் திருநீறு பூசி, மரஉரி தரித்து பெருமானை வேண்டி அர்ஜுனன் கடுந்தவம் புரிந்ததை விளக்குகிறது வில்லிபாரதம். 

பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ஜுனன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். அப்போது பன்றி வேடத்தில் ஓர் அரக்கன் அர்ஜுனனின் தவத்தைக் குலைக்க முயன்றான். எம்பெருமான்மீது மாறாத பக்தியுடன், அர்ஜுனன் தபசு மரம் ஏறி தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தான். அர்ஜுனனின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கி பாண்டவர்களை ஆசிர்வதித்ததோடு, அவனது பிரார்த்தனைக்கு இணங்கி அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். அர்ஜுனனுக்கு அஸ்திரம் கொடுத்ததால் சிவபெருமான் அஸ்திரபுரீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். இவருக்கு வம்பங்காட்டு மகாதேவன் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் வழக்குகளிலிருந்து விடுபடலாம் என்று தெய்வப் ப்ரச்னத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. 

திருப்பணியைத் துவங்குவதற்கு முன்னர் பிரச்னம் பார்த்ததில், இங்குள்ள எம்பெருமான் மிகவும் சாந்நித்தியம் கொண்டவர் என்றும், அவரை வழிபட, வழக்குகளில் வெற்றி கிடைப்பதோடு, எதிர்ப்பு, தடை என எதுவுமே இருக்காது என்றும் தெரிய வந்தது. இதன் காரணமாக, இப்போது பல ஊர்களில் இருந்தும் இங்குள்ள ஈசனை வழிபட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதுபோலவே, இங்குள்ள அம்பாள் சௌந்திரவல்லியை வழிபட சர்வ மங்களங்களும் உண்டாகும். முன்புறம் கல் ஸ்தூபி வடிவ தீப ஸ்தம்பம், கார்த்திகை தீபத்தன்றும், மாத பௌர்ணமி தினங்களிலும் இந்த தீப ஸ்தம்பத்தில் விளக்கேற்றி வழிபட, பல நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. பெரிய திருக்குளமும் உள்ளது. முதல் பிராகாரத்தில் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. அதனை அடுத்து முன் மண்டபமும், அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன. 

முன்மண்டபத்தில் சுற்றுப்பிராகாரத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், வடபுறத்தில் நான்முகன், துர்க்கையின் திருவுருவமும் அமையப் பெற்றுள்ளன. இறைவன் அஸ்திரபுரீஸ்வரர் எனவும், அம்மன் சௌந்தர நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பிற்காலப் பல்லவர் கால கலைப்பாணியை கொண்ட சண்டேஸ்வரர் சந்நதியும் உள்ளது. கல்வெட்டுகளில் இறைவன் ‘திருவம்பங்காட்டு மகாதேவர்’ என்று வழங்கப்பட்டுள்ளார். ஊரின் முகப்பிலேயே வடகிழக்கு திசையில் அஸ்திரபுரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கி.பி. 893ம் ஆண்டு கல்வெட்டு இத்தலத்தின் சிறப்புகளை கூறுகின்றது.  ஒரு சிற்பத் தொகுதியில் பிரம்மா, நரசிம்மர், சிவன், வளையல் அணிந்து கூப்பிய கரம், கணபதி, வத்சம் ஆகியவை உள்ளன. மேலும் இச்சிற்பத் தொகுப்பு பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இச்சிற்பத் தொகுப்புடன் முற்கால சோழர் காலத்திய ஜேஷ்டாதேவி மற்றும் பிள்ளையார் சிற்பங்களும் உள்ளன. 

சோழர் காலத்திய கல்வெட்டு ஒன்றில் சிற்பிகளுக்கு பெரும் மதிப்பு கொடுத்ததையும் மற்றும் வெளிமாநில சிற்பி வல்லுநர்களை வரவழைத்த செய்தியும் 
பொறிக்கப்பட்டுள்ளது. மாவுக் கல்லினாலான பலகைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ஆதனூரில் காணப்படும் சிற்பத் தொடர்
15 செ.மீ. நீளமும் 10 செ.மீ. அகலமும் கொண்டவை. ஆனூர் அட்டபுரீஸ்வரர் கோயிலில் முதலில் பிரம்மாவும், அவரை அடுத்து நரசிம்மரும், மேடைமீது சிவலிங்கமும் முருகரும் தேவயானியும், காளையின்மீது சிவனும், உமையும் அடுத்து ‘ஸ்ரீ’ என்கிற மகாலட்சுமியும் அதனை அடுத்து துர்க்கை தனது இடதுகாலால் எருமைத் தலையை மிதித்து, இடதுகையால் அதன் வாலினைப் பிடித்து வலதுகையில் உள்ள நீண்ட வாளைக்கொண்டு மகிஷனைக் கொல்வது போன்றும், அடுத்த மேடை மீது பிள்ளையாரும் காணப்படுகின்றனர். 

ஆலயக் கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன் காலத்தில் படகம், திமிலை, கரடிகை, காலம், சேகண்டி போன்ற வாத்தியக் கருவிகள் இந்த ஆலயத்தில் இசைக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சுற்றில் கைகளால் தாளமிட்டபடி அருளும் சங்கீத விநாயகரையும், நந்தி, அக்னி ஆகிய இருவரோடு கூடிய ஜேஷ்டா தேவியையும் தரிசிக்கலாம். அதேபோன்று ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவரும் (இவருடன் நாய் இல்லை) உள்ளார். சனகாதி முனிவர்களோ, முயலகனோ, ஏன் கல்லால மரம்கூட இல்லாமல் தட்சிணாமூர்த்தி தனியே தரிசனம் அளிக்கிறார். வெகு அபூர்வமான அமைப்பு இது. இத்தல நாயகி சௌந்தர்யவல்லி பெயருக்கு ஏற்றாற்போல் பேரழகுடன் ஜொலிக்கிறாள்.

சிற்ப அமைப்பைக் கொண்டு இச்சிற்பத் தொடர் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும், காலம் கி.பி.67ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே மக்கள் இங்கு செல்வாக்கோடு வாழ்ந்த வரலாற்றையும், கி.பி.9ம் நூற்றாண்டு முதல் இக்கோயில் தொடர்ந்து விழாக்களோடு சிறப்பு வழிபாட்டிலும் அரசர்களின் பேராதரவும் பெற்றிருந்தது என்ற செய்தியையும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். வரலாற்றைப் பிரதிபலிக்கும் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் அழியும் நிலையில் இருக்கின்றன. 16ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பல்லவ மன்னன், கம்ப வர்மன், பராந்தகச் சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்கச் சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் ஆகிய மன்னர்கள் அஸ்திரபுரீஸ்வரரை போற்றி, வழிபாட்டுக்கு தானம் அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறன. 

2002ம் ஆண்டு ‘ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை’ என்ற அமைப்பினை நிறுவி, அதன்மூலம் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளை நடத்தி வருகிறார், தேவராஜன். ஆனூர் மக்களும் ஆர்வமாக இக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாண்டுகளாக  பாழடைந்து கிடந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுகள் பல கடந்துவிட்ட போதிலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் நிறைவடையவில்லை. தற்போது ஒருவேளை பூஜை மட்டுமே நடந்துவரும் இக்கோயிலில் ஆருத்ரா, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன என்று இக்கோயிலின் திருப்பணிக் கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்து, பாண்டவர்களின் சங்கடங்களை எல்லாம் போக்கி, அவர்களின் வாழ்வை வளமாக்கிய அஸ்திரபுரீஸ்வரரின் ஆலயம் இப்படிச் சிதிலமடைந்து இருக்கலாமா? 

தற்போது ஆலயத்தில் திருப்பணிகள் அரைகுறையாக முடிந்தநிலையில் விரைவிலேயே முழுமையாக நடத்தி முடிக்கப்படவும், விரைவிலேயே கும்பாபிஷேகம் நடைபெறவும், கோயிலில் நித்திய பூஜைகள் தவறாமல் நடந்திடவும், நம் தொன்மைச் சிறப்பை எடுத்துக் கூறும் இங்குள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்கவும் நம்மாலான உதவிகளைச் செய்வோம். இந்த ஆலய கைங்கரியத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களாலான உதவிகளை செய்யலாம். 9551066441 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூருக்கு அருகே ஆனூர் இருக்கிறது. சென்னை - கோயம்பேட்டிலிருந்து 129 சி என்ற பஸ்சும், செங்கல்பட்டிலிருந்து 2, 12 என்ற எண் கொண்ட பேருந்துகள் ஆனூர் வழியே செல்லும்.