” அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்பு (உ)ருகு சிந்தை இடுதிரியா
நன்பு (உ)ருகி ஞானச்சுடர்விளக்கு ஏற்றினேன் நாராணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ( நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஈரேழு உலகங்களையும் காத்தருளும் ஸ்ரீவிஷ்ணுபகவானை புதன்கிழமையாகிய இன்று துதித்து தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறிடவும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
” ஓம் நாராயணாய நமஹ “ என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்லவேண்டும் .. இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கின்றோமோ அந்தளவிற்கு மனம் பக்குவப்படும் .. இதிலுள்ள ‘ நம’ என்ற சொல்லுக்கு -
“ உனக்கே நான் உரியவன் “ என்பது அர்த்தம் ..
“ ஓம்காரமாக விளங்கும் நாராயணனே ! உனக்கே நான் உரியவன் “ என்பதே ! மந்திரத்தின் முழுப்பொருள் ..
அதாவது உலகத்திற்கு வந்துவிட்ட பிறகு என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம் .. அவ்வாறு செல்லும் நாளில் “ நாராயணா ! உன்னால் வந்த நாம் உன் இடத்திற்கே திரும்பி வந்துவிடுகிறோம் “ என்று சரணாகதி அடைவதாக அர்த்தம் .. கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து பூலோகத்தில் சுகமாகவும் .. நிம்மதியாகவும் வாழ “ ஓம் நமோ நாராயணாய “ என்று சொல்வது பொருத்தமானது ..
கடவுளைவிட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு ..
திரௌபதியின் துன்பத்தைப் போக்கியது - கோவிந்தா என்னும் நாமம் ..
முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது - ஆதிமூலம் என்ற திருநாமம் ..
கலியுகத்தில் இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடையமுடியும் ..
பெருமாள் கோவில்களுக்குச் சென்றால்
“ ஓம் நமோ நாராயணாய “ என்று சொல்லி வணங்குகிறோம் ஏனென்றால் .. கோவில்கள் திறக்கப்பட்டதும் முதலில் பாடப்படும் திருப்பல்லாண்டு
(பெரியாழ்வார் எழுதியது)
“ ஓம் “ என்ற பிரணவ மந்திரத்திற்கு இணையானது ..
இதையடுத்து பாடப்படும் மதுரகவியாழ்வார் எழுதிய
“ கண்ணி நுண் சிறுத்தாம்பு “ என்ற நாலாயிரதிவ்விய பிரபந்த பாசுரம் “ நமோ “ எனப்படும் சொல்லுக்கு விளக்கமாக உள்ளது ..
மூன்றாவதாகப் பாடப்படும் ஆண்டாளின் திருப்பாவை
“ நாராயணாய “ என்ற சப்தத்தின் விளக்கமாக கருதப்படுகிறது ..
“ ஓம் நமோ நாராயணாய “ என்று பக்திப்பரவசத்தோடு சொன்னாலே போதும் இந்த மூன்றையும் நம் வாயால் சுவைபட பாடியதாக அர்த்தம் .. படிக்காதவர்களும் சுலபமாக இறைவனை வணங்க எளிமையான வழியே இது ..
நாமும் ஸ்ரீமன் நாராயணனைப் போற்றித்துதிப்போம் !
வாழ்வில் சகல நலன்களையும் பெற்றிடுவோமாக ..
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment