PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYPPPA....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE " SADURTHI THITHI " TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE .. GOOD LUCK & PROSPERITY .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "




” கஜானனம் பூதகணாதி ஸேவிதம் 
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் 
உமாஸுதம் சோகவிநாச காரணம் 
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் நீக்கமற நிறைந்திருப்பவரும் .. விருப்பு வெறுப்பு இல்லாதவரும் .. நாம் செய்கின்ற பலனை நமக்குத்தந்தருள்பவருமாகிய விக்னவிநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியும் கூடிவருவது
சிறப்பு .. தங்களனைவரும் கல்வியிலும் .. செல்வத்திலும் மேம்பட்டு திகழவும் .. என்றும் மனமகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழ்ந்திடவும் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் .. இன்றைய சுக்லபக்ஷ சதுர்த்தித் திதியை (வளர்பிறை)
“ வரசதுர்த்தி “ என்று அழைப்பார்கள் .. இன்றைய நாளில் விநாயகர் அகவல் .. விநாயகர் கவசம் .. காரியசித்திமாலை .. பாடல்களைப் பாடி விநாயகரை வழிபடலாம் .. இதில் எடுத்த செயல் அனைத்தும் வெற்றிபெறச் செய்யும் .. தனிச்சிறப்புடைய துதிகள் உள்ளன .. விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றிப்பாராயணம் செய்பவர்களின் மன விருப்பம் எளிதில் நிறைவேறும் ..
யாராலும் அறிந்துகொள்ள முடியாத பரம்பொருளாகவும் ..
எல்லாவற்றையும் அறியச்செய்யும் இறைவனாகவும் .. ஞான அருள் வழங்கும் தலைவனாகவும் கணபதியே திகழ்கிறார் ..
அண்ணணுக்கும் .. தம்பிக்கும் ஆறெழுத்துமந்திரம் முருகப்பெருமானுக்கு “ சரவணபவ “ என்ற ஆறெழுத்து 
மந்திரம் போல விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு .. “ ஓம் வக்ரதுண்டாய ஹும் என்பதே அது .. இதனை ஜெபித்து வந்தால் பகை - துனபம் நீங்கும்
முருகப்பெருமான் இந்த மந்திரத்தைச் சொல்லியே தாரகாசுரனை வதம்செய்தார் .. 
வாமன அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார் .. 
ஸ்ரீபரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார் .. 
இந்திரன் கவுதமரின் சாபத்தாலுண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜபித்தே நீங்கப்பெற்றான் ..
தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்கள் முழுவதும் நீக்குபவரும் தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச்செல்பவரும் எடுத்த செயல்களை எளிதாகவும் .. இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவருமான ஒற்றைக் கொம்பன் கணபதியின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுவோம் .. எமை காத்தருள்வானாக .. 
 ” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment