PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED " SHASHTI THITHI " WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH HAPPINESS & FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM MURUGA "


” ஆறுமுகம் கொண்டவனே ! முருகா ! முருகா ! 
அழகுமயில்மேல் அமர்ந்தவனே ! முருகா ! முருகா ! 
கொக்கரிக்கும் சேவலையே கொடியாக அலங்கரித்தவனே
முருகா ! முருகா ! சாம்பசிவன் மகனே ! கடும்கோபம் கொண்டு ஆண்டி உடை தரித்தவனே ! முருகா ! முருகா !
தந்தையின் நெற்றிக்கண் தீப்பொறியில் பிறந்தவனே !
அன்னை உமையவளின் கரங்களாலே வரமாக சூழாயுதம் பெற்றவனே ! முருகா ! முருகா ! 
அடங்காத அரக்கனை அடக்கி வெற்றி கொண்டவனே !
ஓம் சரவணபவனே ! திருச்செந்தூர் வேலவனே ! 
உன் திருவடி பணிந்தோம் ! சரணம் ! சரணம் ! ஷண்முகா சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம் தோறும் அள்ளிவழங்கும்
வெள்ளிக்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. வேண்டுவனயாவும் வேண்டியவாறே தந்தருளும்படி எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரதவிழாவாகக் கொண்டாடுகின்றோம் .. 
சூரபத்மனின் ஒருபாதி - “ நான் “ என்கின்ற அகங்காரமும் 
மற்றொருபாதி - “ எனது “ என்கின்ற மமகாரமாகவும் 
அமையப்பெற்றவன் ..
சூரபத்மன் - ஆணவமலம் கொண்டவன் ..
தாரகாசுரன் - மாயாமலம் உடையவன் 
சிங்கமுகன் - கன்மமலத்தின் வடிவம் ..
இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது .. அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம் .. கன்மம் .. மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறைசக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இந்நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது ..
முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது .. அனைவரிடமும் அன்பு பாராட்டவேண்டும் .. பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்தவேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது ..
கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் முதலான கவசநூல்களைப் பாராயணம் செய்து வாழ்வின்
உச்சத்தத்தைத் தொடுவீர்களாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் ..
Image may contain: 3 people, people standing, sky and outdoor என்றும் நலமுடனும் ..




No comments:

Post a Comment