SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED " PRADOSHAM " WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH SUCCESS .. PEACE & FULFILL ALL YOUR DESIRES .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..


” பேரிடர் நீங்கும் பிணியாதாயினுஞ் சாம்பலாகுமே ! 
மறைபோற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும் சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே ! 
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித் தொழுதபேறு
பெற ப்ருஹந்நாயகியுறை தக்ஷிணமேருதன்னை 
கைதொழுதக்கால் ! சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன்தொழுபவர்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலமே ) 
தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறிடமும் .. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் என்றும் நிலைத்திடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷபூஜையின் மகத்துவம் யாதெனில் இதில் திரள்வது புண்ணிய சக்திகள் மட்டுமல்லாது இறைவனே பிரதோஷநேரத்தில் திருநடனக்காட்சி அளிப்பதால் நடராஜத் தத்துவமாகிய “ அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே “ என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும் ..
(மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம் ) 
பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலப்ரகாந்தி 
கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரயகாரணாய ஹாலாஸ்ய மத்யநிலயாய நமஸ்ஸிவாய !
பொருள் - 
பக்தர்களுடைய மனக்கவலையை போக்கி அருள்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே ! பிரளயகாலமேகம் 
போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! பிரதமகணங்களுக்கு ஈஸ்வரரானவரே ! காலகூடவிஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே ! ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !
பிரதோஷதினங்களில் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெருகும் .. பரமகருணாநிதியான சிவபெருமானை போற்றுவோம் ! சிவயோகம் பெறுவோமாக ! 
” ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 1 person


No comments:

Post a Comment