SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "


” என்ன துதிசெய்தாலும் உனக்கோர் தயவில்லை .. என்னை நீ தள்ளினாலும் உன்னை நான் விடுவதில்லை 
உன்னருள் பெறவேண்டி உன்பதம் நாடிவந்தேன் !
உன்மலை ஏறிவந்தேன் ! உன்புகழ் பாடிவந்தேன் ! 
கோவிந்தா ! மாதவா ! கேசவா! ரங்கா ! பல்லாண்டு காலம் உன் தலத்தில் வாழவேண்டும் .. தொல்லையும் .. துன்பமும் தொலைவினில் செல்லவேண்டும் .. 
எந்நேரமும் உந்தன் தரிசனம் கிடைக்கவேண்டும் ! 
நாராயணா ! மாதவா ! மாயனே ! அருள்வாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய நன்நாளாக அமைந்திடவும் .. குடும்பத்தில் நல்லாரோக்கியமும் சுபீட்சமும் பெற்றிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
திருமந்திர விளக்கம் - ஓம் நமோ நாராயணாய நம
ஓம் - 
அண்டத்தின் அனைத்து இயக்கங்களும் அதிர்வலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .. உலகத்தில் ஆதியாக தோன்றிய மற்றும் அண்டத்தில் எல்லா இடங்களிலும் வியாபித்து காரியங்கள் செய்யும்பொழுது அரசனை காணும் முன் காவலாளியிடம் நம்மை முற்படுத்துவது போன்று எங்கும் வியாபித்த ஆதிதத்துவத்தின் மூலம் துவங்கும் காரியத்தின் துவக்கம் உணர்த்துதல் .. அறிவித்தல் ..
நமோ - 
நம .. நமோ என்ற இரண்டு பதங்கள் .. 
நம என்பதனை நமசிவாய என்ற மந்திரத்திலும் 
நமோ என்பதை நாராயணாய என்ற மந்திரத்திலும் உபயோகிக்கிறோம் .. 
சிவம் என்பது அண்டங்களின் பரவுதன்மை பற்றியது ..
அண்டத்தின் விரிவுகள் கணக்கில் அடங்காதது .. அதுபோல இந்த அண்டத்தில் கருப்பொருள் ஆராய்ச்சி மூலம் ஆத்மஞானம் அடையவிழைந்தால் அடிமுடி காண்பதில் பிரம்மனுக்கு ஏற்பட்ட நிலையே நம் நிலையும் எனவே சிவயோகத்தில் கிடைக்கும் சித்துக்களில் விளையாடினால் மீண்டும் மாயாசக்தியால் ஆட்பட்டு ஆத்மஞானம் கேள்விக்குறியாகிவிடும் .. சித்துக்கள் கைகூடினாலும் சிவயோகத்தால் சித்தசக்தியை அடக்கி தன்னுள் ஒடுங்குவதை - நம என்ற சொல் குறிக்கும் ..
நம் அறிவிலும் சிறியது மனம் .. 
மனத்தினும் சிறியது ஆத்மா .. எனவே தான் நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் 
“ செத்ததின் வயிற்றில் சிறியது “ என ஆத்மாவை குறிப்பிடுகிறார் .. இயற்கையின் அடிப்படை விதிகளின்படி நம்மால் மிக நுண்ணிய பொருள்களை அதிகநேரம் கண்களால் கூட பார்த்துக்கொண்டோ அல்லது நினைவுகளை அதன்மீது நிலை நிறுத்துவதோ மிக கடினம் 
ஆயினும் .. தியானத்தின் மூலம் அறிவை மனத்தின்மேல் திருப்பி அறிவினால் மனத்தை உணர்ந்து மனம் வசப்பட்டபின் மனத்தினால் சிறிய பொருளான ஆத்மனை உணரவேண்டும் .. அறிவினால் நேரடியாக ஆத்மனை உணரமுடியாது .. மொத்த அறிவினை மனத்தின் கண்விரித்து மனதை உணர்ந்த பின மொத்த மன ஆற்றலை ஆத்மன் மேல்விரித்து ஆன்மாவை உணர்தல் வேண்டும் என்பதே நமோ - விரித்தல் ..
நார அயன .. அயன ஆய - 
நார - மனுடத்துவம் 
மாறுதல் - அயனம் 
அயன் - பிரம்மம் 
ஆய - ஆராய்ந்து முடிவுணர்தல் 
உடலில் உறையும் ஆத்மா நான் மானுடன் என்ற நம்பிக்கையை கைவிட்டு தன் உண்மை ரூபத்தை பற்றிய ஆய்வில் இறங்கி நான் இந்த உடல் அல்ல ஆத்மன் என்னும் தத்துவத்தை நோக்கி தனது நம்பிக்கையை ஆத்மா சிந்தனை நோக்கி திருப்புதல் - அயன ..
ஆத்மனே நான் என்ற உணர்வு பெற்ற பின் ஆத்ம ஞானத்தால் ஆதிபிரம்மமாகிய அண்ட நாயகனின் துணைகொண்டு பிரம்மஞானம் உணர்தல் - அயன 
நிறை பிரம்ம ஞானத்தால் மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்ய கிடைக்கும் ஒரே ஒரு பொருள் - 
ஓம் நமோ நாராயணாய நம - 
அங்கு அனைத்து ஆத்மாக்களும் அடக்கம் .. அனைத்தும் நிறைந்த நிறைவுப் பொருள் - நம ..
“ ஓம் நமோ நாராயணாய “ என்று மீண்டும் .. மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களைக் களைந்து பாவங்களைப் போக்கி .. குழந்தையைப் போல் அரவணைத்துக் கொள்ளும் திருமாலின் 
திவ்வியபாதக்கமலங்களில் சரணடைவோமாக !

“ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 



No comments:

Post a Comment