SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE " SANKADAHARA SADURTHI " & MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH ABUNDANT GOOD LUCK .. SUCCESS IN ALL YOUR ENDEAVORS TOO .. " JAI SHREE GANESHAYAAYA NAMAHA "


" விநாயகனே ! வெவ்வினையை வேரறுக்க வல்லான் !
விநாயகனே ! வேற்கை தணிவிப்பான் ! 
விநாயகனே ! விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்!
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று .. தும்பிக்கை வைத்திருக்கும் தெய்வத்தை முழுநம்பிக்கையோடு சங்கடஹர சதுர்த்தியாகிய இன்று வழிபட்டு வர தங்கள் இன்னல்கள் யாவும் களைந்து .. இன்பங்கள் அனைத்தும் தங்கள் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகரை வழிபாடு செய்வதற்கு பலவிரததினங்கள் இருந்தாலும் .. சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் ..
எனக் கூறப்படுவதுண்டு .. 
“ ஹர “ - என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே “ சங்கடஹர சதுர்த்தியாகும் “
புராணவரலாறு -
விநாயகர் ஒருமுறை கைலையில் ஆனந்தமாய் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன் விநாயகரின் பெருத்த தொந்தியையும் .. துதிக்கையையும் அவற்றைத் தூக்கிக்கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் பெரிதாய்ச் சிரித்தான் ..
அவன் தன்னைப்பார்த்து எள்ளி நகையாடியதைக்கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை தேய்ந்தவையாகவே இருக்கட்டும் எனக்கூறவே ! மனம்வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும் .. தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான் ..
அப்போது விநாயகர் சந்திரனிடம் “ இன்றுமுதல் சுக்கிலபட்ச சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும் எனவும் .. அதைப்போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதமிருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும் எனவும் கூறியருளினார் .. 
இந்த விரதமே ! சங்கடசதுர்த்தி விரதம் என்று அழைக்கப்படுகிறது ..
தும்பிக்கையானின் மலரடி தொழுவோம் ! வாழ்வில் சுபீட்சமும் .. நலம்பல பெறுவோமாக ! 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment