PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A BLESSED SUNDAY & MAY THE LOVE & BLESSINGS OF LORD KRISHNA FILL YOUR LIFE WITH HAPPINESS & VIRTUES ON THIS ASHTAMI DAY & ALWAYS .. " JAI SHREE KRISHNA "



அருமறை முதல்வனை ஆழிமாயனை 
கருமுகில்வண்ணனைக் கமலக்கண்ணனை 
திருமகள் தலைவனைத் தேவ தேவனை 
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வளர்பிறை அஷ்டமித் திதியும் .. ரோகிணி நட்சத்திரமும் கூடிவரும் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்நாளில் 
ஸ்ரீகிருஷ்ணபகவானை வழிபடுவது சாலச்சிறந்ததாகும் .. 
தங்களனைவருக்கும் தங்கள் வாழ்வில் பரிபூரணமான நிறைவையும் .. மகிழ்ச்சியையும் தந்தருள்வாராக ..
ஓம் தாமோதராய வித்மஹே ! 
ருக்மணி வல்லபாய தீமஹி ! 
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !!
மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம் .. இறைநிலை எளிதாக எட்டக்கூடியது
பிறவிப்பயன் தெரியாமல் இறைநிலையை உணரமுடியாமல் உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணங்கள் கிருஷ்ணரைப் பின்பற்றினால் மாறும் ..
அவர் தீராதவிளையாட்டுப்பிள்ளை மட்டுமல்ல .. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தவர் .. ” மகிழ்ச்சி வெளியில் இல்லை .. மனதில்தான் இருக்கிறது “ என்பதனை உலகிற்கு உணர்த்தியவர் ..
கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .. அத்தனை சிறப்புமிக்கது தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர் .. 
அதனால்தான் இவரை “ கண்ணா” என்கிறோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவர் ..
” முகுந்தா ” - மு என்றால் முக்தியை அருள்வது என்றபொருள் ..
கு - என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது .. 
இவ்வுலகில் வாழ்வதற்கும் முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “ முகுந்தா என்று அழைக்கிறோம் ..
“ ஜெயகிருஷ்ணா ! முகுந்தா முராரே “ என்று பாடினாலே எந்த அசுரசக்தியாலும் நம்மை வீழ்த்தமுடியாது .. கிருஷ்ணபகவானைப் போற்றுவோம் ! தம்பக்தர்களை தன் கண்களைப்போல் காத்தருள்வாராக ! 
“ ஜெய் ஸ்ரீகிருஷ்ணா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..
 



No comments:

Post a Comment