GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A BLESSED " SOMVAR " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM SINS & PAINS & MAY ALL YOUR PRAYERS BE ANSWERED TODAY & SHOWER YOU WITH HAPPINESS .. GOOD HEALTH & GOOD FORTUNE .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM


” அமுதமொழியாள் உமையவள் கணவ ! 
அர்தரி தரிதனும் மனித்தப் பிறவி 
அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை 
அஞ்சலென்றருளிக் காத்திட வருக !
அக்கு வடந்தனை அணிந்தோய் வருக ! 
அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக !
அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக “ 
( சிவகவசம் - ஆரோக்கியம் .. வேண்டுவன கிடைக்க)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் சிறப்பான விரதங்களுள் ஒன்றாகிய சோமவார விரதமும் திங்கட்கிழமையாகிய இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது .. 
சிறப்புமிக்க இந்நாளில் தாங்கள் வேண்டுவன யாவும் வேண்டியபடியே கிடைக்கப்பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் சோமவாரவிரதம் கடைபிடிக்கப்படுகிறது .. க்ஷ்ய ரோகத்தில் துன்புற்று அழியும்படி தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் இவ்விரதத்தை அனுஷ்டித்து மேன்மை பெற்றான் .. அத்தோடு சந்திரனின் ஒருகலையைத் தனது
முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரன் என்ற பெயரையும் ஈசன் பெற்றார் ..
புராண வரலாறு -
முன்னொருகாலத்தில் “ ஸீமந்தினி “ என்ற அரசகுமாரி சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தாள் அவளின் பக்தியை தங்களுக்கு சாதமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் 
“ நாங்கள் கணவன் - மனைவி இருவரும் சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில் தான் உணவு அருந்துவோம் இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர்மக்கள் சொன்னார்கள் .. அதனால் உங்களைத் தேடி எங்கள் வயிற்றுப்பசியை போக்கவந்தோம் “ என்று அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு நயவஞ்சகமாக பேசினார்கள் ..
பசி என்று வந்தவர்கள் உண்மையான பக்தர்கள் என்றெண்ணி அவர்களுக்கு பாதபூஜை செய்து உணவு படைத்தாள் .. என்ன ஆச்சரியம் .. கணவன் மனைவிபோல் நடித்த அந்த திருடர்களில் ஒருவன் உண்மையிலேயே பெண்ணாகவே மாறினான் .. சோமவார விரதம் இருப்பவர்களை எந்த துஷ்டசக்திகளும் அண்டாது .. தீயசக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள் ..
சோமவாரவிரதம் இருப்பவர்களின் கையால் உணவு உண்டால் செய்தபாவங்கள் அனைத்தும் விலகும் .. சுபீட்சம் ஏற்படும் .. விரதம் அனுஷ்டிப்பவர்கள் ஈசனுக்கு பிரியமானவராக மாறுவார்கள் .. 
தாங்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பலகோடியாண்டு இன்னல்கள் இன்றி வாழ ஈசன் அருள்புரிவாராக ..
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 


No comments:

Post a Comment