SWAMI SARANAM GURUVE SRANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS TOO .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH


 ஓம் நடராஜனே போற்றி ! 
ஓம் நடனகாந்தனே போற்றி ! 
ஓம் அழகனே போற்றி ! 
ஓம் அபயகரனே போற்றி ! 
ஓம் வினை தீர்க்கும் எம்மானே போற்றி ! 
ஓம்போற்றி ! ஓம்போற்றி ! ஓம்போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நன்நாளாகிய இன்று மகாதேவரும் .. மஹாத்மாவும் .. மகாபாதகங்களை அழிப்பவரும் நடராஜனுமாகிய “ ம “ கார சொரூபனைத் துதித்து தங்களனைவரது வாழ்விலும் ஆனந்தமும் நல்லாரோக்கியமும் என்றும் நிலைத்திட எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சித்ஸபேசாய வித்மஹே ! 
சிதாகாசாய தீமஹி ! 
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!
சிவபெருமானின் 64 மூர்த்திவடிவங்களில் மிகவும் அற்புதமானது .. நடராஜர் திருவுருவமே ! என்று போற்றப்படுகிறது .. இவரது நட்சத்திரம் திருவாதிரை இது வெப்பமானது .. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம் .. கையில் அக்னி .. உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார் 
அவரைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன ..
சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே ! இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம் 
அம்பலவாணர் .. சபாபதி .. கூத்தப்பெருமான் .. நடேசன் ..
சித்சபேசன் .. நடராஜன் .. கனகசபாபதி .. பொன்னம்பலம் என்ற பெயர்களும் உண்டு ..
இலக்கியங்களில் “ ஆடல்வல்லான் “ என்று குறிப்பிட்டுள்ளனர் .. ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திடும் .. 
 நிலம் .. நீர் .. காற்று .. நெருப்பு .. ஆகாயம் எனும் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருகோவில் உண்டு .. அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று .. இந்தக்கோவில் 
“ ஆகாயத்தைக் குறிக்கிறது “
நடராஜ உருவத்தின் தத்துவம் -
1 - வலதுபுற மேல்கையில் உடுக்கையய் கொண்டிருப்பது -
இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதனை காட்டுகிறது .. 
2 - இடதுபுற மேல்கையில் உள்ள நெருப்பு - 
எந்நேரமும் அழித்துவிடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது .. 
3 - வலதுபுற கீழ்கையில் காப்பாற்றுவதைக் குறிப்பதைப் போன்று - பயப்படாதே ! நான் இருக்கிறேன் ! என்று கூறுகின்றது .. 
4 - இடதுபுற கீழ்கையால் உயர்த்தி இருக்கும் காலைக்காட்டி - தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதனை உணர்த்துகிறது .. இந்த நடனத்தில் ஆக்கல் .. அழித்தல் .. காத்தல் .. என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துபோகின்றது ..
தில்லை அம்பலவாணரைப் போற்றுவோம் ! வாழ்வில் நலமும் வளமும் பெறுவோமாக ! 
“ தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment