” புலனும் .. மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய்
உன் உள்ளத்தினுள்லேயே !
உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை”
(பஜகோவிந்தம் -ஜகத்குரு ஆதிசங்கரர்)
உன் உள்ளத்தினுள்லேயே !
உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை”
(பஜகோவிந்தம் -ஜகத்குரு ஆதிசங்கரர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. உத்தமமானதும் .. மோட்சப்பிராப்தியையும் அளிக்கக்கூடிய மஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசித் திதியுமாகிய இன்று பகவானைத் துதித்து அனைத்து பாவங்களிலிருந்தும் நிவர்த்திபெற்று ஓராயிரம் பசுக்களைதானம் அளிப்பதால் கிட்டும் புண்ணியத்தையும் தங்களனைவரும் பெற்றிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ ஆமலகி ஏகாதசி “ என்றழைப்பர் .. ( அளப்பறிய திறன்வாய்ந்த நெல்லி) ருத்ராக்ஷ்மரம் சிவத்தோன்றல் போல .. நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா .. காமதேனுவுக்குள் அடக்கம்போல நலன்பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியினுள் அடக்கம் .. ஆதிசங்கருக்கு அளிக்கப்பட்ட ஒருநெல்லி .. அவரை கனகதாரா துதியை பாடச்செய்து தங்கமழையைப் பொழியவைத்ததுபோல பெரும்பயன் அருளவல்லது ..
அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச்செய்திட விஷ்ணுபுராணம் .. பாகவதம் .. ராமாயணம் போன்ற இறைத்திருவிளையாடல் நூல்களையோ .. விஷ்ணுசகஸ்ரநாமம் .. நாலாயிர திவ்யபிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வது சிறப்பு ..
பகவான் மஹாவிஷ்ணுவின் அருட்சக்தியானது நமது அனைத்து சங்கடங்களையும் தேவர்களையும் ரட்சித்து காக்கும் பூரணசக்தி பெற்றது .. இச்சக்தியின் பலத்தினால்தான் பகவான் மஹாவிஷ்ணு .. மது கைடபன்
என்னும் இரு அரக்கர்களையும் சம்ஹரித்தார் ..
என்னும் இரு அரக்கர்களையும் சம்ஹரித்தார் ..
மஹாபாபியான வேடுவன் அறியாமல் ஒருதடவை செய்த ஆமலகி விரதத்தின் பலன் அவனை ஜென்ம ஜென்மத்திற்கும் பகவான் விஷ்ணுவின் க்ருபாகடாக்ஷ்த்திற்கு பாத்திரமாக்கியது .. ஆகையால் நாமும் வாழ்நாளில் முடிந்தவரை ஆமலகி ஏகாதசி விரதம் மட்டுமல்லாது அனைத்து ஏகாதசி விரதங்களையும் சிரத்தையுடனும் .. பக்தியுடனும் அனுஷ்டித்து பகவானின் அருட்கடாக்ஷ்த்தினை வேண்டிநிற்போம் ..
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment