PANVEL BALAGAN PATHAM POTRI....GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMAVAR VIRADAM TOO .. MAY LORD SHIVA BLESS YOU & GUIDE YOU & RELIEVE YOU FROM ALL SINS & SORROWS FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

No automatic alt text available.
Image may contain: people standing and indoor


” அண்டமாய் அவணியாகி
அறியொண்ணா பொருளுமாகி 
தொண்டர்கள் குருவுமாகி
தூய திரு தெய்வமாகி
எண்திசை போற்ற நிற்கும்
என்பிரான் நீலகண்டர் சிவனடி போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று அணுவுக்குள் அணுவாக இருந்து அண்டமெல்லாம் ஆட்டிவைக்கும் ஈஸ்வரனுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்நாளாகத் திகழவும் நல்லாரோக்கியம் பெற்று வாழ்வில் உச்சத்தைத் தொட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சோமவாரம் என்பது திங்கள்கிழமையைக் குறிக்கும் .. ’
‘ சோம’ என்றால் சந்திரன் .. சந்திரனுக்கு தமிழில் திங்கள் .. மதி .. நிலா .. என்ற பெயர்களும் உண்டு .. தட்சனால் தேய்ந்துபோகும்படி சபிக்கப்பட்ட சந்திரன் சோமவார விரதமிருந்து சாபவிமோசனம் பெற்று சிவபெருமானின் ஜடாமுடியில் சூடிக்கொள்ளப்பட்டான் .. அத்தனை சிறப்புபெற்றது சோமவார விரதம் ..
சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணியும் சந்திரனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைபிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் நோய்நொடிகள் இன்றி சுகதேகியாக இருக்கவும் இந்த விரதத்தினை மேற்கொள்கின்றனர் .. இவ்வழிபாடு சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக கருத்துவேறுபாடின்றி இணைந்திருக்க வகைசெய்யும் ..
ஆலயத்தில் சுவாமிக்கு பூஜைநேரத்தில் தீபாராதனைகள் செய்வார்கள் .. இதனை வெறும் சடங்காக மட்டும் எண்ணாமல் உலகின் தோற்றத்தையும் .. ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபடல் சிறப்பாகும் .. அதனால் சுகபோகமும் .. ஞானமும் கிட்டும் ..
தேய்ந்துபோன சந்திரனை தனது சடையில் சூடி சந்திரசேகரனான சிவபெருமானை இன்றையநாளில் போற்றி நம்வாழ்வை தேய்பிறையிலிருந்து காத்து வளர்பிறையாக வளர அவரின் அருளாசியைப் பெறுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment