PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SHASHTI THITHI & MAY THE DIVINE BLESSINGS OF LORD MURUGA BRING YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR WISHES TOO .. " OM MURUGA " GURUVE SARANAM...SWAMY SARANAM

 
Image may contain: food

ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆதியான பரமனின் மகனே !
கங்கையில் தோன்றியதால் காங்கேயன் என்று அழைக்கப்படுபவனே ! தெய்வானை மணாளனே ! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே ! சரணடைந்தவரைக் காப்பவனே !
தேவர்களைக்காத்த தேவசேனாபதியே ! 
வாழ்நாள் முழுவதும் எமக்கு வழித்துணையாக வந்தருள்வாயாக “
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன ..
கிழமைகளில் - செவ்வாய் ..
நட்சத்திரத்தில் - கிருத்திகை
திதியில் - சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை .. இந்நாட்களில் விரதமிருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர்வாக்கு ..
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவன் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது .. சூரனுடன் போரிட்ட கந்தப்பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்தசஷ்டியாகும் .. சஷ்டி என்றால் 6 .. அந்த ஆறுநாட்களும் விரதமிருந்து கந்தப்பெருமானை வழிபடுவதே சஷ்டிவிரதமாகும் ..
சஷ்டி என்பது திதிகளின் வரிசையில் ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு .. ஐஸ்வர்யத்தைத் தரக்கூடியது 6 .. அந்த 6ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன் .. இவர் லக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறார் .. திருமணம் .. வாகனம் .. வீடு .. ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான் .. எனவே சஷ்டித்திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம் .. நம் உள்ளத்திலும் இறைவன் குடிகொள்வான் என்ற பொருளும் உண்டு ..
சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திரயோகத்தை அருள்வார் .. அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல .. நமது “ அகம் “ என்கிற மனதையும் குறிக்கிறது .. நம்மனதில் இருக்கிற பேராசை .. வெறுப்பு .. ஆணவம் .. கோபம் .. வஞ்சம் தீர்த்தல் .. கருமித்தனம் உள்பட பல்வேறு தீயகுணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப்பெருமான்
சூரனை வேல்கொண்டு சம்ஹாரம் செய்ததுபோல் கந்தப்பெருமானே வேலாய் வந்து நின்று .. தங்கள் பிரச்சினைகளையும் தீர்த்து வளமிகுந்த நல்வாழ்வையும் தந்தருள்வானாக .. “ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment