” நாயகி நான்முகி நாராயணி .. கைநளினி பஞ்சநாயகி !
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சுவாய் அகிமாலினி வாராஹி சூலினி மாதங்கி என்நாயகி யாதி உடையாள் சரணம் ! அரண் நமக்கே “
(அபிராமி அந்தாதி)
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சுவாய் அகிமாலினி வாராஹி சூலினி மாதங்கி என்நாயகி யாதி உடையாள் சரணம் ! அரண் நமக்கே “
(அபிராமி அந்தாதி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று வளர்பிறை பஞ்சமித் திதியும் கூடிவருவதால் ஆன்மீகத்திலும் .. வாழ்விலும் நிறைவாகவும் .. உயர்வாகவும் வாழ உதவும் அன்னை வராஹியை வழிபடுவது சிறப்பாகும் .. அன்னையைத் துதித்து தங்கள் எண்ணங்களெல்லாம் ஈடேறவும் சொன்ன வாக்கெல்லாம் பலிதமாகவும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும் வராஹிதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே !
ஹலஹஸ்தாய தீமஹி !
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
ஹலஹஸ்தாய தீமஹி !
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
அன்னை மஹா வராஹி ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள் .. இவளே ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத் தலைவியுமாவாள் (சேனாதிபதி) ஸ்ரீ வராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை .. தைரியம் தருவதோடு எதிர்ப்புகள் .. எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமுமாகும் .. பில்லி .. சூனியம் .. ஏவல்களை நீக்குவாள் .. இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்தேவையில்லை .. எதிரிகளின் வாக்கை .. அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள் .. வழக்குகளில் வெற்றியும் தருபவளாவாள் ..
மந்திர சாஸ்திர மொழி - “ வராஹிக்காரனோடு வாதாடாதே “ என்பதேயாகும் ..
அன்னையை மனதாரப் போற்றினால் சடுதியில் மாற்றம் தருவாள் .. வாழ்வில் என்றும் ஏற்றம் காணலாம் !
“ ஓம் ஸ்ரீமஹா வராஹி ! நின் பத்மபாதம் நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் ஸ்ரீமஹா வராஹி ! நின் பத்மபாதம் நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment