” நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே ! ‘ ராம ‘ என்ற இரண்டெழுத்தினால் “
( கம்பர் )
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே ! ‘ ராம ‘ என்ற இரண்டெழுத்தினால் “
( கம்பர் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
“ ஸ்ரீராம நவமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
“ அறமே வாழ்வின் ஆன்மீக ஜோதி ! மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் “ ஸ்ரீமன்நாராயணனே ஸ்ரீராமனாக அவதாரம் செய்தார் ..
துன்பத்தில் கலங்காத மனதிடத்தையும் .. எடுத்த செயல்கள் யாவும் வெற்றியளிக்கவும் .. வாழ்க்கையில் சகலசம்பத்துக்களும் பெற்று நிம்மதியான வாழ்வு தங்களனைவருக்கும் அமைந்திட அருட்கடலாகிய ஸ்ரீராமனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தசரதாய வித்மஹே !
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும் “ ராம “ என்ற நாமம் கொண்டுள்ளது .. எனவே ஒருவன் ராம நாமத்தை மூன்றுமுறை ஜபிப்பதால் அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவனாகிறான் ..
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி ..
ராமன் என்ற கடலில் கலப்பதற்கு பூமியை புனிதப்படுத்திக்கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம் .. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால் இவரது வரலாற்றுநூல் “ ராமாயணம் “ எனப்பெயர் பெற்றது .. ஒருவில் ! ஒரு சொல் ! ஒரு இல் ! என உலகிற்கு வாழ்ந்துகாட்டியவர் ..

கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரியும் .. ஆனால் ராமாவதாரத்தில்
என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ஸ்ரீராமனுக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை ..
என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ஸ்ரீராமனுக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை ..
ஸ்ரீராமனுடைய ஜனன காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்ததாம் ( சூரியன் .. குரு .. சனி செவ்வாய் .. சுக்கிரன்) அதனால் ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து பூஜிப்பது சாலச்சிறந்தது .. ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரகதோஷ நிவர்த்தியும் .. ஸர்வவியாதி நிவர்த்தியும் .. ஐஸ்வர்ய அபிவிருத்தியும் .. ஆயுள் .. ஆரோக்கியமும் கிடைக்கும் ..
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தரவல்லவனே ஸ்ரீராமனே !
ஸ்ரீராம நவமியன்று உபவாசமிருந்து ராமருக்கு துளசிமாலை அணிவித்து சுந்தரகாண்டம் .. அயோத்திகாண்டம் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு ..
ராமருடைய வடிவம் தியானத்திற்குரியது ..
ராமருடைய நாமம ஜெபத்திற்குரியது ..
ராமருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் தர்மத்திற்கு விளக்கம் ..
ராமருடைய நாமம ஜெபத்திற்குரியது ..
ராமருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் தர்மத்திற்கு விளக்கம் ..
ஸ்ரீராமனின் மேன்மையை உணர்ந்து .. அவன்வழிநடந்து எதற்கும் உதவாத காம .. குரோத .. மோக .. லோப எனும் தீயகுணங்களை விட்டொழித்து ஸ்ரீராமனின் நற்குணங்களைப் பின்பற்றி எல்லோரையும் நேசிக்கப் பழகுவோம் !
அத்தகைய மனப்பாங்கு நம்மிடம் வளரவேண்டும் என அந்த ஸ்ரீராமனையே சரணடைவோம் ! நல்ல குணங்கள் நம்மிடையே தழைக்கும் நாள் எதுவோ அதுவே ஸ்ரீராமன் பிறந்த பொன்னாளாகும் .. “ ஜெய் ஸ்ரீராம் “
“ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே !
ரகுநாதாய ! நாதாய ஸீதாய பதயே நமஹ “
ரகுநாதாய ! நாதாய ஸீதாய பதயே நமஹ “
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment